பக்கம்:மிஸஸ். இராதா.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ளுக்குச் சரக்குகள் கொடுப்பார்கள். அவளுடைய புருஷன் நீண்ட காலமாக அந்தக் கடையில் நாணயமாக உழைத்து திடீரென்று மாரடைப்பால் காலமானவர். புருஷனின் நாணயம் தான் செளந்தரத்திற்கு பிற்காலத்தில் மூலதனமாக அமைந்தது.

“நாணயம் என்பது வெறும் காசு மட்டுமில்லே; கை சுத்தமும் ஒருவகையான நாணயம்தான்; வாய்ச் சுத்தமும் ஒருவகையான நாணயம்தான்” என்று தன் புருஷனைப் புகழ்ந்து ஒரு நாளைக்கு பத்துத் தடவையாவது செளந்தரம் சொல்லாமல் இருக்கமாட்டாள்.

மஞ்சுளா முன் அறிவிப்பில்லாமல் திடீரென்று செளந்திரத்தின் வீட்டுக்கு வந்தது. இறந்துபோன தன் மகள் ராதாவே பெரியவளாகி தேவதைபோல் வந்து நிற்பதாக நினைத்துவிட்டாள் செளந்தரம்,

“ராதாக்கண்ணு! மஞ்சுளாவை தன் மகள் நினைவாக ‘ராதா’ என்றுதான் செளந்திரம் அழைப்பதுண்டு. மஞ்சுளா என்றும் மஞ்சு என்றும் மற்றவர்களால் அழைக்கப்பட்டாலும் செளந்தரம் மஞ்சுளாவை ராதா என்ற பெயரைத் தவிர வேறு பெயர் சொல்லி அழைத்ததில்லை.

"நீ வந்தது எனக்கு ஆறுதல், சஞ்சலத்தோட இருக்கும் உனக்கும் மனச்சாந்தி - நானே ஒன்னை இங்கே கூப்பிட்டுக்கணும்னு நெனைச்சேன். ராதா போனபிறகு நீதான் எனக்கு ராதா அவ இருந்தா உன் மாதிரியே பெரியவளாகி இருப்பாள். எங்க முதலாளியிடம் சொல்லி ஒனக்கும் ஏதாவது வேலை வாங்கணும்னு நினைப்பு.”

“நானும் அப்படித்தான் சித்தி நினைச்சேன். உன் கிட்டேயே இருந்து ஏதாவது வேலை பார்த்தா எனக்கும் மன நிம்மதியா இருக்கும்”.

முதலாளிகூட இன்னக்கித்தான் வராருனு பேசிக்கிருங்க! போனவாரம் தான் அவர் மகளுக்குக் கல்யாணம்! கல்யாணத்தை திடீர்னு வச்சுப் புட்டாங்க! மதுரைதான் மாப்பிள்ளை வீடு.

37

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மிஸஸ்._இராதா.pdf/43&oldid=1550914" இலிருந்து மீள்விக்கப்பட்டது