பக்கம்:மிஸஸ். இராதா.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பணத்தோடு பணத்தைச் சேக்கிறதும் வறுமையையோடு வறுமையைச் சேக்கிறதும்தானே இப்போ கல்யாணப் பொருத்தமா இருக்கு| ஜோடிப்பொருத்தம், மனப்பொருத்தம் எல்லாம் இப்ப இல்லை ராதா! இப்ப முக்கியம் பணப்பொருத்தம்தான்! எங்க முதலாளிக்கும் ஒரே மகள்; மாப்பிள்ளை அவங்க வீட்டுக்கு ஒரே பிள்ளை, கேக்கணுமா வசதியை| மைசூர் எஸ்டேட்டு, ஈரோட்டுக் கடை எல்லாமே இனி அந்தப் புள்ளேயாண்டானுக்குத்தான்!". செளந்தரத்தின் பேச்சில் முதலாளி வீட்டு மீது கொண்டுள்ள விசுவாசம் மகிழ்ந்து கொட்டியது.

மஞ்சுளாவுக்கும் ஒரு தெம்பு வந்து விட்டது. செளந்தரம்மாள் எப்படியும் வேலை வாங்கித் தந்துவிடுவாள் என்ற நம்பிக்கை மஞ்சுளாவின் உள்ளத்தில் மேலோங்கி நின்றது.

கொப்புடையம்மன் ஜவுளி ஸ்டோரின் முதலாளி சடையப்பர் மூன்று நாட்களுக்குப்பின்தான் கடைக்கு வந்தார். அதுவரை அவர் கிட்டங்கியில் தங்கி ஒரு மாதக் கணக்குகளைச் சரி பார்த்துக்கொண்டிருந்தார். சடையப்பர் கடைக்கு வருவது சிப்பந்திகளுக்கு ஒரு விழாவாகத் தெரிந்தது. செளந்தரத்தம்மாளும் ஒரு சிப்பந்தியைப்போல் அன்று கடைக்கு வந்திருந்தாள்.

“என்ன செளந்தரம்! செளக்கியமா இருக்கியா?”

“முதலாளி புண்யத்தில் நிம்மதியா இருக்கேன்” "உன் மனசுக்கும், உன் புருஷன் நாணயத்துக்கும் பகவான் ஒரு ஆண் வாரிசைக் கொடுக்காமெ போய்ட்டானே!”

“நம்ம நினைக்கிறபடியா எல்லாம் நடக்குது! எனக்கு புள்ளை இல்லாவிட்டாலும், நீங்க எனக்கு பிதா மாதிரி இருக்கிறதே எனக்குப் புள்ளே இருக்கிற மாதிரித்தான் முதலாளி!”

செளந்தரத்தம்மாளின் இந்த இதமான பேச்சு சடையப்பரைப் பெரிதும் கவர்ந்து விட்டது. ஒரு சிப்பந்தி முதலாளியைப் புகழ்வது அபூர்வம்; அதைவிட அபூர்வம் மனதாரப் புகழ்வது. செளந்தரம் மனப்பூர்வமாகக் கண் கலங்கப் புகழ்ந்ததுதான் சடையப்பரின் கண்களைக்கூட ஊறவைத்து விட்டது.

38

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மிஸஸ்._இராதா.pdf/44&oldid=1550915" இலிருந்து மீள்விக்கப்பட்டது