பக்கம்:மிஸஸ். இராதா.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



"செளந்தரம், உன் புருஷன் என்னிடம் நடந்து கொண்ட விதத்திற்காக நானும் என் சந்ததியினரும் எவ்வளவோ கடமைப்பட்டவர்கள். நான் எங்கள் குடும்பத்துக்கு சுவீகார புத்திரனாக வந்தவன். நான் வருமுன்பே இந்தக்கடை நடக்கிறது. புதிதாக வந்த என்னை ஏமாற்றி எவ்வளவு வேண்டுமானுலும் உன் புருஷன் எடுத்துக் கொண்டிருக்கலாம்.

ஆனால் அந்த விஷயத்தில் உன் புருஷன் சத்புத்திரனாக நடந்து கொண்டான். நான் அதை என் ஆயுள் உள்ளவரை மறக்க மாட்டேன். உனக்கு மட்டும் ஒரு பிள்ளை இருந்திருந்தால் அவனை இப்போது உன் புருஷன் இருந்த இடத்தில் வைத்திருப்பேன்" என்றார் சடையப்பர்.

“முதலாளி!”

“என்ன சொல்லு!”

"எனக்குப் பிள்ளையில்லாட்டாலும் என் அக்கா மக ஒருத்தி இருக்கா! நல்லாபடிச்சவ. பி. ஏ. வரை படிச்சிருக்கா! அவளுக்கு ஏதாவது வேலை ஏற்பாடு செய்து கொடுத்தால் போதும்.”

“கல்யாணம் ஆகிடுச்சா?”

“......... இல்லை!”

“கல்யாணம் ஆகியிருந்தா எஸ்டேட்டிலே வச்சுக்கிறலாம். கன்னிப்பொண்ணை எப்படிக் கொண்டு போகிறதுன்னுதான் யோசிக்கிறேன்” என்றார் சடையப்பர்.

"அதுனால என்ன! நீங்க எங்கள் குடும்பத்துக்குத் தெய்வம் மாதிரி! அவளும் ரொம்ப கரெக்டானவ முதலாளி!

39

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மிஸஸ்._இராதா.pdf/45&oldid=1550918" இலிருந்து மீள்விக்கப்பட்டது