பக்கம்:மிஸஸ். இராதா.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



"செளந்தரம் உன் அக்காள் மகளைப் பற்றி இனிமேல் நீ எனக்குச் சொல்ல வேண்டாம்!” என்றார்.

இதைக் கேட்ட செளந்திரம் திடுக்கிட்டுப் போனாள்.

‘பயப்படாதே செளந்திரம். உன் அக்காள் மகள் மிகவும் நாணயமானவள். நான் ரெயிலில் வந்து இங்கு இறங்கியபோது யாரோ ஒருவன் எனது ரெயில் பெட்டிக்குள் புகுந்து சாமான்களைத் திருடப் பார்த்தான். இந்தப் பெண்தான் "திருடன்! திருடன்!” என்று கூச்சல் போட்டுப் பிடித்துக்கொடுத்தாள். இவள் இல்லாவிட்டால் எனக்கு எவ்வளவோ நஷ்டமாகியிருக்கும்.’

செளந்தரம் இதைக்கேட்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தாள்.

“அதுமட்டுமில்லே! உடனே என் பர்சிலே இருந்து ஒரு நூறு ரூபாய் நோட்டை எடுத்துக் கொடுத்தேன். உன் பொண்ணு அதை வாங்க மறுத்திட்டா! விலை மதிக்க முடியாத அந்த உதவிக்கு நூறு ரூபாய் விலை வைத்துவிட்டோமே என்று பிறகுதான் நான் வருத்தப்பட்டேன்” என்றார் சடையப்பர்.

சடையப்பரின் நிறுவனத்தில் மஞ்சுளா, ராதா என்ற பெயரில் நிரந்தரமான ஒரு அங்கமாகி சடையப்பரோடு சில்வர் ஸ்டார் எஸ்டேட்டுக்குப் போய்விட்டாள். இப்போது ராதா சடையப்பருக்கு செக்ரெட்ரி!

இதுதான் மஞ்சுளா, மெர்க்காராவுக்கு வந்து சேர்ந்த கதை.

மாமனார் வீட்டில் மகாராஜாவின் அரண்மனையைப் போன்ற வசதிகள் இருந்தும் ஆனந்தனின் உள்ளம் உற்சாகம் பெறவில்லை. அவன் உள்ளத்தில் ஒரு குறு குறுப்பு, ஒரு உறுத்தல் இருந்து கொண்டே இருந்தது. “ராதா யார்? மஞ்சுளா தான் அவளா? அல்லது உலகத்தில் வெவ்வேறு வயிறுகளில் ஒரே மாதிரிப் பெண்கள் பிறந்து விட்டார்களா?" -- இதுதான் ஆனந்தனைக் குழப்பிக் கொண்டே இருந்தது. 'மஞ்சுளாவாக இருந்தால் இவ்வளவு நாட்களுக்குள் ஏதாவது ஒரு கட்டத்-

40

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மிஸஸ்._இராதா.pdf/46&oldid=1550921" இலிருந்து மீள்விக்கப்பட்டது