பக்கம்:மிஸஸ். இராதா.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தில் காட்டிக் கொண்டிருப்பாள்; அல்லது இந்த வேலையே வேண்டாம் என்று சலாம் போட்டுவிட்டுப் போயிருப்பாள். சேச்சே! அவளாக ஒரு நாளும் இருக்க முடியாது“ என்று ஆனந்தனின் மனம் ஒரு முறை நினைத்துச் சமாதானம் அடைந்து கொண்டாலும், அவன் மனத்தில் ஒளிந்து கொண்டிருந்த வேறொரு நினைப்பு அடுத்த கணமே பேருரு எடுத்து அவனை மிரட்டத் தொடங்கி விடுவதுண்டு. ”அவளே தான் இவள்! பெண்கள் மேகத்துள் பறக்கும் பறவைகள் மாதிரி; அவர்களின் தடங்களைக் கண்டுபிடிப்பது இயலாத காரியம். மஞ்சுளா திட்டமிட்டு பழிவாங்குவதற்காகத்தான் இந்த எஸ்டேட்டை தேடிப்பிடித்து வந்து வேலைக்குச் சேர்ந்திருக்கிறாள்” என்று அடுத்த நினைப்புத் தோன்றி ஆனந்தனை அலைக்கழித்தது.

“மாப்பிள்ளே!”

“என்ன மாமா!”

“ராதா மிகவும் கெட்டிக்காரி, நாணயமானவள். அவள் இந்த எஸ்டேட்டுக்கு செக்ரெட்டரியாக வாய்த்தது எனக்குப் புதையல் கிடைத்த மாதிரி. அவள்தான் இங்கு ஆல் இன் ஆல்!."

"உண்மை தான் மாமா! அவள் இல்லாமல் இங்கே எதுவுமே நடக்காது போலத்தான் தெரிகிறது. எல்லோருமே அவள் கையில்தான் இருக்கிறார்கள். அவளைத்தான் எதிர்பார்க்கிறார்கள் அவளைத்தான் நம்புகிறார்கள்!”

"மிகவும் அடக்கமானவள்;அதைவிட அவள் ஒரு தேவதையைப்போல் கண்ணியமானவள். நீண்ட கொம்புகளையுடைய மான்கள் செடி, கொடிகளுக்குள் சிக்கிக் கொள்ளாமல் காட்டில் ஓடித் திரிவது எவ்வளவு ஆச்சரியமான காரியமோ அதைப்போலத்தான் ஒரு இளம்பெண் வசதியான வட்டாரத்தில் ஒழுக்கமாக வாழ்க்கை நடத்துவதும்!”

இது ஆனந்தனின் மனத்தில் சுருக்கென்று முள் தைப்பதைப்போல் இருந்தது. ஒரு வகையில் அவனுக்கு ஒரு மனத்தெளிவு ஏற்படுவது போலவும் இருந்தது. 'இவள் அவளல்ல! இவள்வேறு

41

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மிஸஸ்._இராதா.pdf/47&oldid=1550925" இலிருந்து மீள்விக்கப்பட்டது