பக்கம்:மிஸஸ். இராதா.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அவள் வேறு! என்று நினைத்து ஆறுதல் அடைந்தான். ஒரே மரத்தில் காய்காய்க்கும் கனிகள் கூட விதவிதமான வடிவங் களைப்பெற்று விடுகின்றன. ஆனால் வெவ்வேறு தாய்களுக்குப் பிறந்த பெண்கள் இப்படி ஒரே வடிவமாக எப்படி அமைந்து விடுகிறார்கள்?" என்று அவன் தத்துவ விசாரணையில் இறங்கி விடுவான். அவன் சிந்தனையை ஒவ்வொரு கட்டத்திலும் கீதா தான் தலையிட்டுத் தேன் கூட்டைக் கலைப்பதுபோல் கலைத்து வந்தாள்.

“ராதா, மிகவும் நல்லவள். பார்ப்பதற்கு ரதி மாதிரி இருக்கிறாள். ஆனால் ஏன் கல்யாணம் செய்து கொள்ளாமல் இருக்கிறாள்? ஒரு வேளை யாரையும் காதலிக்கிறாளோ!"

“எல்லாவற்றையும் என்னிடம் கேட்டால் எப்படி? நீயும் ஒரு பெண், அவளும் ஒரு பெண்; நீயே அவளிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாமே!”

“கேட்டு விடலாம்; ஒரு வேளை அவள் நம்மைத் தவறாக நினைத்துக் கொண்டால் என்ன செய்வது?”

‘அவள் உன்னைப்பற்றி என்ன நினைத்து என்ன செய்துவிடப் போகிறாள்? அவளா இந்த எஸ்டேட்டுக்கு முதலாளி. எல்லாமே நாம்தானே! ஆப்டர் ஆல் அவள் ஒரு செக்ரெட்டரி, அவ்வளவு தான்; நீ நினைத்தால் நாளைக்கே அவளுக்குச் சீட்டைக் கிழித்து அனுப்பி விடலாம்!’

–– என்று ஆனந்தனும் கீதாவும் இப்படி அடிக்கடி பேசிக் கொள்வார்கள். அந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கிற மாதிரி ‘அதெல்லாம் நடக்காது– அப்படிச் செய்வதெல்லாம் தப்பு–பெண் பாவம் பொல்லாதது’ என்று வேறு எதற்காகவாவது உள்ளே இருந்து வந்து கொண்டே சடையப்பர் சொல்லுவது அவர்களுக்கு முகத்திலே கரி பூசுவது போல் இருக்கும்.

“கீதா, எனக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது. குடகு நாட்டிலே உள்ள ஒரு தோட்டத்திற்கு தமிழ் நாட்டிலே இருந்து ஒரு பெண்––இளம் பெண்––குமரிப் பெண்––எப்படி வந்து

42

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மிஸஸ்._இராதா.pdf/48&oldid=1550927" இலிருந்து மீள்விக்கப்பட்டது