பக்கம்:மிஸஸ். இராதா.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சேர்ந்திருப்பாள்? நீ ஒரு நாளைக்காவது இதை உன் தந்தையிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள நினைத்ததுண்டா?’

‘உங்களை விட எனக்கு இதில் அதிக அக்கறை உண்டு. ஆனால் எதற்கும் நேரம், காலம் என்றிருக்கிறதல்லவா?’

இப்படி கீதாவும், ஆனந்தனும் பேசிக் கொண்டிருக்கும் கட்டங்களில், எந்த நேரத்தில் ராதா இங்கே காலெடுத்து வைத்தாளோ அது முதல் நமக்கு அபரிமிதமான லாபம் என்று சொல்லிக் கொண்டே சடையப்பர் வருவார். சடையப்பர் இவ்வாறு இயற்கையாகப் பேசிக்கொண்டே அடிக்கடி ஹாலுக்குள் வருவது ஆனந்தன்-கீதா உரையாடலுக்கு முற்றுப் புள்ளி வைத்துக்கொண்டே வந்தது.

“மிஸ்டர் ஆனந்த்!”

‘ஓ ராதாவா! என்ன ராதா!’

“சித்தாப்பூருக்குப்போய் இன்று நீங்கள் சினிமா பார்க்கலாமாம்; ஐயா சொல்லச் சொன்னார்கள். வந்ததிலிருந்து நீங்கள் வெளியிலேயே போகவில்லையாம். இதையும் ஐயாதான் சொன்னார்கள்!”

“இந்தா பார் ராதா, இங்கேயெல்லாம் பழைய படங்கள் தான் ஒடும்; மேலும் பணி கொட்டிக் கொண்டிருக்கிறது. மாமாவிடம் சொல்லிவிடு; மெர்க்காராவுக்குப் போகும்போது எல்லாம் பார்த்துக் கொள்ளலாம்.'

—இப்படி ‘அலுவலக’க் குறிப்புகளைத்தான் ராதா, ஆனந்தனோடு பேசுவாள். அவள் மனம் சிறிதும் இளகவில்லை. குழாய்க்குள் ஒடும் தண்ணீரைப்போல ஒரே சீராகத்தான் அவள் உள்ளம் வேலை செய்து கொண்டிருந்தது.

ஆனல் ஆனந்தன்?

ராதாவின் தோற்றம், அவனுக்கு மஞ்சுளாவின் திருவுருவை நினைவு படுத்தியது. அவளது குரல் - பகலில் அவன் விழித்துக் கொண்டே கனவு காண்பதைப்போல் நிலை குலைய வைத்தது.

43

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மிஸஸ்._இராதா.pdf/49&oldid=1551000" இலிருந்து மீள்விக்கப்பட்டது