பக்கம்:மிஸஸ். இராதா.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



“மஞ்சுளா எவ்வளவு அழகானவள்! எப்போதும் கறந்த பாலைப்போல் சுத்தமாக இருப்பாளே! மகுடத்தில் ஜொலிக்கும் மாணிக்கம்போல் அவள் குங்குமம் மின்னுமே! அவளுக்கா அப்படி ஒரு வியாதி?”

ஆனந்தன் மனதுக்குள்ளே இப்படிக் குமுறிக்கொள்வான்.

"அழகும், குணமும் இணைவது அபூர்வம் என்பார்கள். அந்த அபூர்வம் ராதாவிடத்தில் கைகோர்த்து நிற்கிறது. பலநாள், பல வருடப் பழக்கத்தாலே உருவாகும் நல்ல இயல்பு பிறவியிலேயே அழகாகப் பிறந்த ராதாவிடம் சரணடைந்து கிடப்பது இது அபூர்வமில்லையா?

ஆனந்தன் நித்திரையில்லாமல் புலம்பிக் கொண்டே இருந்தான். ஆனல் கீதா அவன் மீது கொண்டிருந்த பக்தி அவனைத் திசை திரும்பாமல் பார்த்துக் கொண்டே இருந்தது. பகைவன், பகைவனுக்குச் செய்யும் தீமையைவிட தவறான வழியில் திரும்பிய உள்ளம் அதிகமாகக் கேடுவிளைவிக்கும் என்று அவன் மாமா அடிக்கடி அவனிடம் சொல்லிக்கொண்டிருந்தது ஒரு பக்கம் அவன் உள்ளத்தை அனலில் வாட்டுவது போல் இருந்தது. இப்படி ஒரு நாளா, இரண்டு நாளா? இருபது நாட்கள் ஆனந்தன் இந்த உபாதைக்கு ஆளாகியிருந்தான்.

எஸ்டேட்டில் ஒரு புதிய டைனிங் ஹால் கட்டி முடித்தார்கள். தரையெல்லாம் தேக்குமரம், முகடு கூட மரத்தாலானது தான். குளிர் பிரதேசமல்லவா? சுற்றுச் சுவர் மட்டும் சிமிண்டினால் பூசப் பட்டிருந்தது.

அன்று முதன் முதலாக அந்தச் சாப்பாட்டறையில் சாப்பாடு நடந்தது. சடையப்பர், அவர்மகள் கீதா, மருமகன் ஆனந்தன் ராதா எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட தொடங்கினார்கள். மரவாடையும், பெயிண்ட்வாடையும் மூக்கைத்துளைத்தன. ராதாவுக்கு எதிரே ஆனந்தனும் கீதாவுக்கு எதிரே சடையப்பரும் அமர்ந்திருந்தார்கள். விவரம் தெரியாதவர்கள் யாராவது அந்தக் கோலத்தைப்பார்த்தால் இரண்டு ஜோடிகள் உட்-

44

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மிஸஸ்._இராதா.pdf/50&oldid=1550930" இலிருந்து மீள்விக்கப்பட்டது