பக்கம்:மிஸஸ். இராதா.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கார்ந்திருப்பதுபோல் மனதுக்குப் படத்தான் செய்யும். ஆனால் அப்படி ஒரு உள் நோக்கம் கற்பிக்க அங்கே யாரும் இல்லை. காரணம், ராதா தன்னை ஒரு கண்ணாடிப் பாத்திரமாகக் கருதிக் கொண்டுதான் ஒவ்வொரு நாளையும் கழித்து வந்தாள்.

சாப்பாட்டு மேஜையில் வெள்ளித் தட்டுகள் வைக்கப் பட்டன. கறிகளைப் பரிமாறுவதற்குச் சமையல்காரன் ஆயத்தமாகிக் கொண்டிருந்தான்.

“கீதா”

“என்னத்தான்”

"இவ்வளவு அழகான அறையில் ஒரு குறை இருப்பது உனக்குத் தெரியவில்லையா?”

‘'எதிலும் எப்போதும் குறை சொல்வதுதான் உங்களுக்கு வழக்கமாகிப் போய்விட்டது. அப்பா உங்களுக்காகத் திட்ட ட்டுக் கட்டியிருக்கிறார்" என்றாள் கீதா.

அந்தக் கணத்தில் ஆனந்தனின் விழிகள் பதிந்திருந்த திக்கை நோக்கினுள் ராதா. சுவரில் ஒரு மூலையில் வர்ணம் பெயர்ந்து உள்ளே இருந்த வெள்ளைப்பூச்சு வெளியில் தெரிந்து கொண்டிருந்தது.

“கீதா எனக்குச் சாப்பாடு வேண்டாம். மரவாடையும், பெயிண்ட் வாடையும் என் மூக்கைத் துவாரம் போடுகின்றன" என்று சொல்லிக் கொண்டே எழுந்து போய்விட்டான்.

சடையப்பர் உள்பட அனைவருக்கும் இது விளங்காத புதிராகத்தான் இருந்தது.

"என்னம்மா கீதா இப்படிப் போய்விட்டார் மாப்பிள்ளே!”

"எப்பவும் இப்படித்தானப்பா! திடீரென்று அவருக்கு மூடு மாறிவிடும். எழுந்து போய்விடுவார். அவர் குணம் மழைமேகம் போல! எப்போது என்ன செய்வார் என்று சொல்லமுடியாது.”

"போம்மா, போய் அழைச்சுகிட்டு வாயேன்!”

45

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மிஸஸ்._இராதா.pdf/51&oldid=1551001" இலிருந்து மீள்விக்கப்பட்டது