பக்கம்:மிஸஸ். இராதா.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



"இல்லேப்பா அவர் குணம் ஒரு போதை மாதிரி. அது தானாகத்தான் தணியனும்.”

“கீதா எனக்கு ஒண்னும் கோபமில்லை. மனதிலே ஒரு அருவருப்பு! அதை என்னாலே வெளிப்படையாகக் காட்டிக்க முடியல்லே! ராத்திரிக்கு வழக்கம் போல நம்ம பழைய டைனிங் ஹாலிலேயே சாப்பிடலாம்! இடையிலே குறுக்கிட்டு கீதாவுக்குச் சமாதானம் சொன்னான் ஆனந்தன்.

ராத்திரி வந்தது. மீண்டும் புதிய டைனிங் ஹாலிலேயே சாப்பாடு பரிமாறப்பட்டிருந்தது.

“கீதா சாப்பாடு தயார்!" என்றார் சடையப்பர்.

"இல்லே கீதா! எனக்கு புது அறைபிடிக்கவில்லை. பழைய அறையிலேயே சாப்பிடலாம்” என்றான் ஆனந்தன்.

"இல்லை, மிஸ்டர் ஆனந்தன் புது அறை பகலில் இருந்தது மாதிரி இருக்காது. எ ல் லா ம் சரியாகிவிட்டது; வாருங்கள்’’ என்றாள் ராதா.

இதைக்கேட்டதும் தண்ணீரில் அமுக்கி எடுத்த ஆட்டைப் போல் அவனுக்கு உடம்பு சிலிர்த்தது.

"ராதா?”

"ஆமா சார், வந்து பாருங்கள். உங்களுக்கு மனக் குறைவே இருக்காது. அருவருப்பும் தோனாது.

ஆனந்தன் அவனையும் அறியாமல் புதிய சாப்பாட்டறைக்குள் நுழைந்தான். நடந்து வந்ததாகவே அவன் நினைக்காமல் மிதந்து வந்ததாகவே கற்பித்துக்கொண்டான். அவன் கண்களையே அவனால் நம்ப முடியவில்லை. பகலில் அவன் கண்களையும் மனத்தையும் உறுத்திக் கொண்டிருந்த வர்ணம் போன அந்த இடம் சரி செய்யப்பட்டிருந்தது.

“ராதா?"

"என்ன மிஸ்டர் ஆனந்த்!”

46

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மிஸஸ்._இராதா.pdf/52&oldid=1551002" இலிருந்து மீள்விக்கப்பட்டது