பக்கம்:மிஸஸ். இராதா.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



“உன்னைப் புரிந்து கொண்டேன்”

"என்ன மாப்பிள்ளே சொல்றீங்க”

“ராதாதான் இங்கே ஆல் இன் ஆல்ன்னு சொன்னீங்களே அது நூற்றுக்கு நூறு உண்மை மாமா” மனதிலே ஒன்றை ஒளித்துக்கொண்டு வெளியிலே வேறு ஒன்றைச்சொன்னான் ஆனந்தன்.

ஆனந்தன் பரிபூரணமாக நிம்மதியை இழந்து விட்டான்.

“இவள் ராதா அல்ல; மஞ்சுளா தான்” என்று தீர்மானித்துக் கொண்டான்.

ஆனந்தன் நிம்மதியை இழந்து விட்டான். அவன் ஒரு இயந்திரத்தைப் போலவே இயங்கிக் கொண்டிருந்தான். அவன் முகத்தில் களை இல்லை. நடமாட்டத்தில் சுறுசுறுப்புக் குன்றிவிட்டது. மஞ்சுளா, ராதா என்ற பெயரில் சில்வர் ஸ்டார் எஸ்டேட்டில் வந்து சேர்ந்திருப்பது துப்பறியும் கதையில் வரும் திடீர்த் திருப்பம்போல் ஆனந்தனுக்குப்பட்டது. அதனால் அவன் மூளை கலங்கியவனைப்போல் காணப்பட்டான்.

அவன் உள்ளத்தில் இரண்டு விதமான துன்பங்கள் தோன்றி அவனே உறுத்திக்கொண்டிருந்தன. ஒன்று--மஞ்சுளா இப்படி ஒரு மாயப் பிசாசாகத் தோன்றி தன் வாழ்க்கையில் குறுக்கிட்டு நிற்கிறாளே என்பது; மற்றொன்று--இந்த விவகாரம் கீதாவுக்குத் தெரிந்து விடக்கூடாது என்பது. இந்த வேதனைகள் அவனைச் சில வேலைகளில் கூனிக் குறுக வைத்துக்கொண்டிருந்தன. பிறவிப் பணக்காரன் என்ற தோரணையில் எதையும் நிமிர்ந்த நோக்குடன் பார்த்து ப் பழகிய ஆனந்தன், தன்னைத்தானே தாழ்த்திக் கொண்டு தன்னை ஒரு குற்றவாளியைப் போல் எ ண் ணி க் கொண்டு தலைகுனிந்து நடக்க ஆரம்பித்தான்.

கீதா என்றும், ராதா என்றும் உரத்த குரலில் கூப்பிட்டுப் பேசும் அவன் குரலை எப்படியோ ஒரு பனிமூட்டம் தாக்கி கிடுகிடுக்க வைத்துக்கொண்டிருந்தது. சண்டைப்படத்தை பார்த்து தன் தாயின் இடுப்பைக் கட்டிக் கொண்டு கதறும் சிறு குழந்தை-

47

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மிஸஸ்._இராதா.pdf/53&oldid=1551004" இலிருந்து மீள்விக்கப்பட்டது