பக்கம்:மிஸஸ். இராதா.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

யைப்போல் அவன் நடுங்கிப் போயிருந்தான். யாரும் அவனுக்கு ஆறுதல் சொல்ல வழியில்லை; ஏனென்றால் யாருக்கும் இந்த விவகாரம் தெரியாது; தெரியவும் கூடாது. இந்த ஒரு விஷயத்தில் அவனும் அவன் உள்ளமும்தான் கூட்டாளிகள். தனிமை தான் அவனுக்கு மணிமண்டபம்.

"ஆனந்தா, மஞ்சுளா எப்படி இங்கு ராதாவாக வந்தாள் என்று குழம்பிக் கொண்டிருப்பதில் பயனில்லை. அவளை இங்கிருந்து கடத்துவதில்தான் உன் எதிர்கால வாழ்க்கையின் ஜீவ நாடியே அடங்கியிருக்கிறது” என்று அவன் மனம் அவனே அச்சுறுத்திக் காட்டியது.

“ராதாவை எப்படி விரட்டுவது? அவள் நாணயம் கெட்டவள்; பொய்க்கணக்கு எழுதுகிறாள் என்று சடையப்பரிடம் சொல்லலாம் என்று நினைக்கும்போது சடையப்பரே நேரில் வந்து “மாப்பிள்ளே, ராதா மிகவும் நேர்மையானவள்; எளிமையானவள். அவள் நமக்குக் கிடைத்த பொக்கிஷம்” என்று சொல்ல ஆரம்பித்தார். இதனால் ஆனந்தன் அந்தத் திட்டத்தைக் கைவிட நேர்ந்தது.

ராதாவை, ஒழுக்கங்கெட்டவள் என்று சேற்றை வாரிப் பூசலாம் என்றாலோ அதற்கும் வழி இல்லை. ஏனென்றால், அவள் யாரிடமாவது சரளமாகப் பேசினால் தானே அந்தப் பழியை அவள் மீது சுமத்தமுடியும். அவள்தான் கண்பட்டை அணிந்த குதிரையைப்போல் நேர்கொண்ட பார்வையிலேயே இருக்கிறாளே! ஆதலால் ஆனந்தனுக்கு அதிலும் வழிபிறக்கவில்லை.

இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தான் ஆனந்தன். கீதாவுக்கும் ராதாவுக்குமே முடிச்சுப் போட்டு விட்டால் எ ன் ன என்று அவனுக்குத் தோன்றியது.

“கீதா!”

"அத்தான்!”

என் மனதில் கொஞ்ச நாட்களாக ஒரு விஷயத்தை உன்னி-

48

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மிஸஸ்._இராதா.pdf/54&oldid=1551005" இலிருந்து மீள்விக்கப்பட்டது