பக்கம்:மிஸஸ். இராதா.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டம் சொல்ல நினைப்பதுண்டு அதற்கு இப்போது தான் நேரம் கிட்ைத்திருக்கிறது.”

“என்ன அத்தான் அப்படிப் புது விஷயம்! சொல்லுங்களேன்!”

"இந்த எஸ்டேட்டில் உன்னைவிட ராதாவுக்குத்தான் அதிக மதிப்பு இருக்கிறது. வேலைக்காரர்கள் அவளைப் பார்த்தால்தான் பயப்படுகிறார்கள். இது உனக்கு வெட்கமாக இல்லையா?”

"தவறு அத்தான்! ராதா நமது செக்ரெட்ரி. அவளுக்கு வேலையாட்கள் பயப்படுவது நமக்குப் பெருமைதானே! காரணம் ராதா அவ்வளவு நாணயமாக இருக்கிறாள்; கண்டிப்பாக நடக்கிறாள்...!”

“உனக்கு ஒன்றும் புரியவில்லை கீதா. எதிர் காலத்தில் இந்த எஸ்டேட் நமக்குத்தானே வரப்போகிறது?”

"வரட்டுமே, அப்போதும் ராதா நமது செக்ரெட்ரியாகத் தானே இருக்கப் போகிறாள்.”

"இல்லை, அதற்குள் அவள் இங்கு சின்ன முதலாளியாகிவிடுவாள். மாமாவுக்கும் விஷயம் புரியவில்லை!”

“அத்தான், ஏன் இப்படி அலட்டிக்கொள்கிறீர்கள். அப்பா, விவரம் தெரியாமல் எதையும் செய்யமாட்டார். அப்பாவே அடிக்கடி சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்! ராதா இல்லாவிட்டால் இங்கே எதுவுமே நடக்காது; யாருமே பணியமாட்டார்கள் என்று அப்பாவே சொல்லும் போது அதை எளிதில் மாற்றி விட முடியுமா?”

ஆனந்தனுக்கு, கீதாவின் பதில் தலையில் சம்மட்டி அடிபோல் விழுந்து கொண்டிருந்தது. அவன் உள்ளம், தவறிப்போய் தரையில் விழுந்துவிட்ட மீனைப்போல் துடித்துக்கொண்டிருந்தது. ஒவ்வொரு நாளையும் அவன் ஒவ்வொரு யுகமாகக் கழித்துக் கொண்டிருந்தான்.

49

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மிஸஸ்._இராதா.pdf/55&oldid=1551006" இலிருந்து மீள்விக்கப்பட்டது