பக்கம்:மிஸஸ். இராதா.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ஒரு காலத்தில் ஆனந்தனின் கண்களுக்குக் காதல் தெய்வமாகத் தெரிந்த மஞ்களா, இப்போது அருவருப்பைத் தரும் குருபீயாகத் தெரிந்தாள். அன்று அன்னமாகவும், மயிலாகவும் கண்களுக்கு குளிர்ச்சியாகத் தோன்றிய மஞ்சுளா, இப்போது பயங்கரமான நகங்களை வைத்துக் கொண்டிருக்கும் பருந்தாகவும், கழுகாகவும் தோன்றினாள். ஆனந்தனப் பொறுத்தவரையில் அன்பு கூட ஒரு வகையான மாயையாகப் போய்விட்டது. ஏனென்றால் அவன் அவள் மீது வைத்த பிரியம் அவளது உருவத்தால் ஏற்பட்ட கவர்ச்சியின் கருவே தவிர, இதயங்களின் சேர்க்கையால் பிரசவித்த பாசமல்லவே!

அன்று எஸ்டேட்டில் கூலி போடும் நாள். எப்போதுமே கூலிபோடும் நாட்களில் ராதா பரபரப்பாக இருப்பாள். அவள் உடலெல்லாம் வியர்த்துக் கொட்டும். ராதாவின் சுறுசுறுப்பும் துடிதுடிப்பும் கீதாவைக் கிறுகிறுக்க வைத்தன. தொழிலாளிகளுக்கு ராதா பணம் பட்டுவாடா செய்வது ஏதோ ஒரு செப்படி வித்தைபோல கீதாவுக்குத் தெரிந்தது. அதைவிட சுயநலம் கருதாமல் ஒரு எசமானியைப் போலவே ராதா நடந்து கொள்வது தான் கீதாவைப் பெரிதும் கவர்ந்திருந்தது.

“அத்தான்!”

“சொல்லு கீதா?”

“ராதா எவ்வளவு விசுவாசமாக இருக்கிறாள் தெரியுமா? உங்களுக்குத்தான் அவளை ஏனோ பிடிக்கவில்லை!”

“கீதா, நீ வெளுத்ததெல்லாம் பால் என்று நினைக்கிற அப்பாவி, உனக்கு ஒரு அண்ணன் இருந்தால் இப்படி நடக்குமா?”.

"அத்தான்! போகப்போகத்தான் உங்களுக்கு உண்மை விளங்கும்!”

“எனக்கு உண்மை நன்றாக விளங்கிவிட்டது. வெளியில் சொல்ல வெட்கப்பட்டுக்கொண்டு நான் மூடி மறைத்துக் கொண்டிருக்கிறேன்” என்று எடுத்தெறிந்து பேசினான் ஆனந்-

50

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மிஸஸ்._இராதா.pdf/56&oldid=1551008" இலிருந்து மீள்விக்கப்பட்டது