பக்கம்:மிஸஸ். இராதா.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தன். ஒருநாளும் அவன் கீதாவிடம் அப்படி நடந்து கொண்டதில்லை.

"புரியும்படியாகச் சொல்லுங்கள். இப்ப என்ன நடந்து போச்சு?"

"நடக்காதது நடந்து போச்சு கீதா! இந்தா; இந்தக் கடிதத்தை படிச்சுப்பாரு! எல்லாம் புரியும்!” என்று கூறி ஒரு கடிதத்தைத் தூக்கிப் போட்டான் ஆனந்தன்.

அந்தக் கடிதம் மைசூரிலிருந்து ஆனந்தனுக்கு வந்த கடிதம். கீதா கடிதத்தைப் பிரித்துப் படித்தாள்.

அன்புள்ள ஆனந்தனுக்கு, நமஸ்காரம். என் மனத்தை எவ்வளவோ அடக்கிப்பார்த்தும் இந்த விஷயத்தை உன்னிடம் சொல்லாமல் இருக்க முடியவில்லை. உன் மாமனர் எஸ்டேட்டில் செக்ரெட்ரியாக வேலை பார்க்கும் ராதாவின் லீலைகள் இப்போது மிகுந்து விட்டன. கூடிய விரைவில் அவள் உனக்கு மாமியாராகப் போகிறாள். வெள்ளை உள்ளம் படைத்த கீதாவுக்கு ராதாவின் வினயமான போக்கு புரியவில்லை. இனிமேலாவது எச்சரிக்கையாக இருக்க முயற்சி எடுத்துக்கொள்வாய் என்று நம்பி இந்தக் கடிதத்தை உனக்கு எழுதியுள்ளேன். உனக்கு இந்த விவரம் எப்படித் தெரியும் என்று நீ நினைக்கலாம். உங்கள் மாமனர் எஸ்டேட்டில் வேலை பார்க்கும் கூலியாட்களில் பலபேர் எனக்குத் தெரிந்தவர்கள். எங்கள் பகுதியைச் சேர்ந்தவர்கள். இந்தக் கடிதத்தைப் பார்த்ததும், நீங்கள் விழித்துக்கொண்டு ராதாவை விரட்டியடிக்காவிட்டால் உங்கள் தலையெழுத்து அவ்வளவு தான் என்றுதான் தீர்மானித்துக்கொள்ள வேண்டும்.

இப்படிக்கு,
உன் தோழன்
மைசூர்

இந்தக் கடிதத்தை கீதா படிக்கும்போது அவள் முகத்தில்

51

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மிஸஸ்._இராதா.pdf/57&oldid=1545426" இலிருந்து மீள்விக்கப்பட்டது