பக்கம்:மிஸஸ். இராதா.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எந்த மாற்றமும் தெரியாமல் இருந்தது. ஆனந்தனுக்கு இது அதிர்ச்சியாகப் பட்டது.

“இப்போதாவது புரிகிறதா கீதா?” ஆனந்தனின் பேச்சில் ஒரு கொக்கரிப்புத் தெறித்துக் கிளம்பியது.

“அத்தான்!”

“சும்மா சொல்லு!”

“இந்தக் கடிதத்தில் கண்டிருப்பது உண்மையாக இருக்காது என்றுதான் நினைக்கிறேன். அப்படி உண்மையாக இருக்குமானால் எங்கப்பா பாக்கியசாலிதான்; ராதாவைச் சித்தி என்று அழைக்கும் பாக்கியம் எனக்கும் கிடைக்கும்.”

கீதாவின் பதில், ஆனந்தனுக்குக் குதிகாலில் தேள் கொட்டுவதுபோல் இருந்தது.

“கீதா!”

“நான்தான் பேசுகிறேன். அத்தான். எங்கப்பா என் கண் எதிரே மகிழ்ச்சியாக இருந்தா எனக்குச் சொர்க்கம் கிடச்ச மாதிரி நான் நினைப்பேன். இதில் உங்களுக்கென்ன சங்கடம்?”

“நீ பேசுவதெல்லாம் உண்மைதான கீதா!”

“உண்மைதான்! ராதா உங்களை மயக்கினால்தான் குற்றம். அதுதான் என்னைப் பாதிக்கும். அவள் அதுவரைக்கும் உத்தமி! யாரிடமும் சொந்தம் கொண்டாடாத எங்கப்பா மீது தானே பிரியம் வைத்திருக்கிறாள் ராதா. எங்கம்மாவைப் போல புண்ணியம் செய்தவள். குதிரைகளை அடக்கும் தேர்ப்பாகனைப் போல இந்த எஸ்டேட்டில் வேலை செய்கிறாள். மலர்களுக்குச் சேதம் ஏற்படாமல் தேனைச் சேகரிக்கும் தேனியைப்போல அவள் பணி சிறந்திருக்கிறது.”

“கீதா!”

“கீதா தான் பேசுகிறது! உங்களுக்கு ஏன் ராதா மீது இவ்வளவு எரிச்சலோ தெரியவில்லை”?

52

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மிஸஸ்._இராதா.pdf/58&oldid=1551012" இலிருந்து மீள்விக்கப்பட்டது