பக்கம்:மிஸஸ். இராதா.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

“வாயை மூடு! மாமா வந்திடப்போறார்!”

“என்னம்மா மாப்பிள்ளையைக் கோபப்பட வச்சுட்டே!”

“ஒண்ணுமில்லேப்பா! ஒரு சிறு சர்ச்சை! குழம்பின் சுவை கரண்டிக்குத் தெரியுமா? நாக்குக்குத் தெரியுமா? என்கிறது பற்றி விவாதிக்கிறோம்பா!”

“பரவாயில்லையே, இது ஒரு புதுமாதிரியான பட்டிமன்றமா இருக்கே! சரி வாங்க சாப்பிடப் போகலாம்!” என்று சடையப்பர் விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து அவர்களை அழைத்துக்கொண்டு போனார்.

கசப்பான கனிகளை கடித்துவிட்ட சிறுவனைப்போல, ஆனந்தன் முகத்தைச் சுளித்துக்கொண்டே டைனிங் ஹாலுக்குள் நுழைந்தான். அவன் முகத்தில் -- இந்த மொட்டைக் கடிதச் சூழ்ச்சியும் பலிக்காமல் போய்விட்டதே என்ற விரக்தி விசுவரூபம் எடுத்து நின்றது.

பங்களாவிற்குச் சற்றுத் தொலைவில் ஒரு சிமிண்ட் பொட்டல் உண்டு. அது ஏலக்காய்களை உலர்த்துவதற்காகப் போடப் பட்டது. ஏலக்காய் விலை உயர்ந்த வாசனைப் பொருளாதலால் அதற்குத் தனியாக காவல்காரர்கள் நியமிக்கப்பட்டிருந்தார கள். எப்போதாவது ராதா அங்கு போவாள். போகும் போது ஏதாவது ஒரு பாடலை மனதுக்குள்ளேயே பாடிக்கொண்டு தான் போவாள். அவள் தோட்டத்திற்குள் நுழைந்தாலே ஒரு அழகாகத்தான் இருக்கும். வெறும் பசுமை மட்டும் மிகுந்திருக்கும் அந்தத் தோட்டத்திற்குள் வண்ணப் பூப்போட்ட புடவையை உடுத்திக்கொண்டு ராதா போகும்போது பூத்து மலர்ந்த பூச்செடி தனது மாயக்கால்களினால் தோட்டத்திற்குள் ஊர்ந்து போவதுபோல் மற்றவர்களுக்குத் தெரியும்.

“ராதா!”

இந்தக் குரல் கேட்டுத் திரும்பிப்பார்த்தாள் ராதா.

53

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மிஸஸ்._இராதா.pdf/59&oldid=1551015" இலிருந்து மீள்விக்கப்பட்டது