பக்கம்:மிஸஸ். இராதா.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

“'என்ன கீதா இங்கே வரை வந்து விட்டாய்! ”

“உன்னை எப்போது தனிமையில் பார்க்கலாம் என்று ஒரு வாரமாகக் காத்து கிடந்தேன். இன்று அந்த வாய்ப்பு கிடைத்தது. வந்துவிட்டேன். தூக்கம் வராதவனுக்கு இரவு கொடிதாகத் தெரியும். நடக்க முடியாதவனுக்குச் சிறு தூரம்கூட நெடுந்துாரமாகப்படும். அதைப்போல உன்னைப் பார்ப்பதற்காக ஏங்கிக்கொண்டிருந்த எனக்கு இந்த வாரமே ஒரு வருஷமாகத் தோன்றியது ராதா!”

“என்ன கீதா பீடிகையே நீளமாக இருக்கிறது. சும்மா சொல்லு. என் மனம் எதையும் தாங்கிக் கொள்ளப் பக்குவப் பட்டு விட்டது.”

"உன் மனம் புண்படும்படி நான் எதையும் சொல்லப் போவதில்லை. நான் அதற்காகவும் இங்கு வரவில்லை ராதா!'

"நீ முதலாளியின்மகள், நீ எதையும் செய்யலாம், நீ என்ன சொன்னலும் நான் அதற்குக் கட்டுப்படக்கூடியவள்; கடமைப் பட்டவள். உன் உத்தரவுகளை மீறுவதற்கு எனக்கு வலிமை இல்லை.

“நீயாக எதையும் கற்பனை செய்து கொள்ளாதே ராதா! நீ சந்தனமரம் போல் மணமுள்ளவள்; தியாக மனம் படைத்தவள்!”

“நான் சந்தன மரமென்றாலும், சுழன்றடிக்கும் சூறாவளியை எதிர்க்க சந்தன மரத்திற்கு ஏது ஊக்கம்?”

“ராதா, உன்னை எங்கள் சிப்பந்தி என்ற முறையில் நான் பார்க்க வரவில்லை. அப்படி விரும்பியிருந்தால் நான் இருக்கு மிடத்திற்கு உன்னே வரவழைத்திருப்பேன். நான் உன்னை என் சித்தியாக ஏற்றுக்கொண்டு ஒரு வார காலமாகி விட்டது ராதா! இனிமே நீ ...நீங்கள் எனக்கு சித்தி!”

கீதாவின் குரலில் பனித்துளிகள் படர்த்திருந்தன.

54

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மிஸஸ்._இராதா.pdf/60&oldid=1551016" இலிருந்து மீள்விக்கப்பட்டது