பக்கம்:மிஸஸ். இராதா.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



"கீதா!"

"நான் அதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன் ராதா! ஏழைவீட்டுக் கூரையில் கிடந்த சுரைக்காயைப்போல் ஒண்டியாக வாழ்ந்த என் தந்தைக்கு நீ துணைவியாக வாய்ப்பது அவர் செய்த தவம் மட்டுமல்ல; நான் செய்த புண்ணியமும் கூட!"

"கீதா இப்படியெல்லாம் என்னைத் தவறாக நினைப்பது நல்லதல்ல! கொடிய பாவம்! கீதா, என் பாவம் உன்னைச் சும்மா விடாது... விடவே விடாது!”

"எனக்கு எல்லாம் தெரியும் ராதா! நான் அதை எதிர்த்தால் தானே நீ கலங்க வேண்டும்; நான் தான் உள்ள பூர்வமாக அதை விரும்புகிறேனே!”

"சுத்தப் பொய்! அபாண்டம்! உனக்குப் பிடிக்கவில்லை யென்றால் நான் இப்போதே வேலையை ராஜினமா செய்யத் தயாராக இருக்கிறேன். தியாகம் எனக்குப் புதிதல்ல; நான் ஏற்கனவே என் புருஷனையே தியாகம் செய்தவள்!”

"ராதா? "ஆமாம், என் கதை உனக்குத் தெரியாது. நான் ஏற் கனவே கல்யாணமானவள். ஒரே ஒருநாள் மணமகளாக இருந்தவள். முதல் இரவு, பெண்களுக்குப் புனித இரவாக அமைகிறது. ஆனால் எனக்கு மட்டும் அந்த முதல் இரவு துன்ப இரவாக முடிந்து விட்டது. பொழுது விடியுமுன் என்னை விவாக ரத்து செய்துவிட்டார்கள்."

"ராதா, இதெல்லாம் நடந்ததுதானா? யார் அந்தப் பாதகன்?’’

"இதெல்லாம் நடந்தது தான என்றா கேட்கிறாய்? ஒரு நாவலாசிரியர் கற்பனை செய்து பார்க்க முடியாத அதிசயங்கள் பெண்களின் வாழ்க்கையில்தான் நடக்கின்றன. அதுவும் ஒரு பணக்காரன் நினைத்தால் ஒரு பெண்ணின் வாழ்க்கையை

55

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மிஸஸ்._இராதா.pdf/61&oldid=1551105" இலிருந்து மீள்விக்கப்பட்டது