பக்கம்:மிஸஸ். இராதா.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நெளிக்கலாம்; வளைக்கலாம்; நொறுக்கலாம்; ஆனால் பாவம் பழுக்கிறவரைதான் அவர்கள் தப்பிக்கலாம். பாவம் பழுத்துக் கனியாகும் போதுதான் பாவிகள் புழுவாகத் துடிக்கிறார்கள். நான் இன்னும் சாகாமல் இருப்பது அதற்காகத்தான். பெண்ணைப் பரிதவிக்க விட்டவர்கள் பாடம் பெறுகிறார்களா என்று நான் பார்க்க வேண்டாமா?”

"ராதா, எனக்கு விவரமாகச் சொன்னால் பரவாயில்லை. உன்னை ஏன் விவாகரத்து செய்தார்கள்? நீ செய்த தவறு என்ன கல்யாணத்திற்கு முன் நீ யாரையாவது விரும்பி அவன் ஏதும் செய்து விட்டானா? என்னிடம் சும்மா சொல்லு ராதா!"

"என் வாழ்க்கை இந்த நிலைக்கு வந்ததே பாழாய்ப்போன காதலால்தான் கீதா; நான் ஒருவரைத் தெய்வமாக மதித்தேன். அவரும் அப்படித்தான் நினைக்கிறார் என்று நினைத்துத் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டேன். திருமணமும் நடந்தது. முதலிரவு நெருங்கிக் கொண்டேவந்து, மல்லிகையும் பன்னீரும், எங்களைப் படுக்கையறைக்கு அழைத்தன. பால் நிலவு நேரம் அவருடைய மாளிகையின் மேல் தளத்திலிருந்து நாங்கள் மீனட்சி அம்மன் கோவிலைத் தரிசித்தோம். சுவாமி புறப்பட்டு வடக்கு மாசி வீதியில் வந்துகொண்டிருந்தது. மேளக் கச்சேரியும், கரகாட்டம், மயிலாட்டம் முதலிய வேடிக்கைகளும் எங்கள் செவிகளுக்கு எட்டி எங்களைப் போதைக்குள்ளாக்கி விட்டன. இதற்கு மேல் நான் உனக்கு விவரிப்பது நல்லதல்ல; படுக்கையறையில் லேசான வெளிச்சம். தெளிந்த நீரோடையில் நீந்தும் மீன்கள் ஒன்றை அணைத்துக்கொண்டு மற்றொன்று தழுவி நீந்துவதைப்போல் நாங்கள் நிலை தடுமாறிப் போயிருக்கிறோம். எந்தப் பெண்ணும் எதிர்பார்க்காத வகையில் திடீரென்று அ வர் படுக்கையை விட்டெழுந்து விளக்கைப் போட்டார்.

'சீ! என்னைத் தொடாதே!' என்றார்.

'அத்தான்! என்ன இதெல்லாம்! என்று சிரித்துக்-

56

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மிஸஸ்._இராதா.pdf/62&oldid=1545435" இலிருந்து மீள்விக்கப்பட்டது