பக்கம்:மிஸஸ். இராதா.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

"அப்படியானல் இந்த வதந்திகளெல்லாம் உண்மை தானா?”

"எந்த வதந்திகள் கீதா!" ஆவலோடு கேட்டாள் ராதா.

கீதா, ஆனந்தனுக்கு வந்த அந்த மொட்டைக் கடிதத்தை எடுத்து நீட்டினாள்.

ராதா அதைப் படித்துப் பார்த்துவிட்டு லேசாகச் சிரித்தாள். கலங்கிய கண்களுடன் அவள் சிரித்தது சில நாட்களில் மாலை வேளைகளில் வெயிலுடன் சேர்ந்து மழைத்துளிகள் விழுவது போலிருந்தது.

"இதையெல்லாம் நான் எதிர்பார்த்தேன் கீதா! நான் இங்கே இருக்கக் கூடாது என்று நினைக்கிறவர்கள் செய்யும் மோசடி நாடகங்கள்! நீ சொன்னால்கூட நான் போய் விடுகிறேன்! வீண்பழி உன் தகப்பனருக்கு வேண்டாம்” என்று அழுதுகொண்டே சொன்னாள் ராதா!

கீதா அவளருகில் சென்று அவளை அணைத்துக் கொண் டாள்.

"என்ன கீதா, ராதா என்ன சொல்கிறாள்? அவள் கண்கள் ஏன் கலங்கியிருக்கின்றன?”

ராதாவும், கீதாவும் திரும்பிப் பார்த்தார்கள். மேகத்திலிருந்து குதித்தவனைப்போல ஆனந்தன் நின்று கொண்டிருந்தான்.

"ஒன்றுமில்லை அத்தான், ராதா அவள் கதையைச் சொல்லி அழுகிறாள்!” என்றாள் கீதா.

"நானும் கேட்டுக்கொண்டுதானிருந்தேன், ராதா தன் முடிவை கடைசிவரை சொல்லவே இல்லையே" என்றான்.

இதைக் கேட்டு ராதா துணுக்குற்றாள்.

58

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மிஸஸ்._இராதா.pdf/64&oldid=1545445" இலிருந்து மீள்விக்கப்பட்டது