பக்கம்:மிஸஸ். இராதா.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மெர்க்காராவுக்குச் சற்று கீழேதான் சித்தாப்பூர் இருக்கிறது. மெர்க்காராவுக்குப் போகமுடியாத சாதாரண மக்கள் அங்குதான் தங்களுக்கு வே ண்டிய சாமான்களை வாங்கிக் கொள்வார்கள். கிட்டத்தட்ட அது ஒரு இராமனாதபுரம் ஜில்லா மாதிரியே இருக்கும். அங்கு சிறிய கடைகள் வைத்திருப்பவர்கள் எல்லாம் இராமனாதபுரம் ஜில்லாக்காரர்களாகத்தான் இருப்பார்கள். காரணம், சித்தாப்பூரைச் சுற்றியுள்ள எஸ்டேட்டுகள் அனைத்தும் இராமனாதபுரம் ஜில்லாவைச் சேர்ந்த நாட்டுக்கோட்டைச் செட்டியார்களுடையது தான்.

தமிழகத்தை ஒட்டியுள்ள கேரளத்தை விட்டு விட்டு, கன்னடத்தையும் தாண்டியுள்ள குடகு நாட்டிற்குச்சென்று அவர்கள் தோட்டங்கள் வாங்குவதற்குச் சில அடிப்படைக் காரணங்கள் இருக்கின்றன. நாட்டுக்கோட்டைச் செட்டியார் களின் பூர்வீக வாசஸ்தலம் பூம்புகார் என்றழைக்கப்படும் காவிரிப்பூம்பட்டினம். காவிரிப்பூம்பட்டினத்தில் வந்து கடலில் சங்கமமாகும் காவிரி நதியின் உற்பத்தி ஸ்தானம் அந்தக் குடகு நாடுதான். அதனால்தான் அதே குடகு நாட்டில் காவேரி உற்பத்தியாகும் தலைக்காவேரிக்கு மிக அருகாமையில், அந்தச் சமூகத்தினர் தோட்டங்களை வாங்கி தொன்றுதொட்டுப் பராமரித்து வருகிறார்கள். நாட்டுக்கோட்டைச் சமூகத்தினருக்கு, காவேரி ஒரு குலதெய்வம் போன்றது. அதனால் தான் அவர்கள் இல்லங்களில் பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு 'காவேரி' என்று பெயர் சூட்டுகிறார்கள். இது புராணம் அல்ல; ஒரு வரலாறு.

தலைக்காவேரியின் அடிவாரத்தில்தான் சித்தாப்பூர் இருக்கிறது. தலைக்காவேரியிலுள்ள நாட்டுக்கோட்டை நகரத்தார் விடுதிக்குக் கூட சித்தாப்பூரிலிருந்துதான் சாமான்கள் போக வேண்டும். தோட்டங்களுக்கு வேலைக்குப்போகும் இராமனாதபுர ஜில்லாவைச் சேர்ந்தவர்கள், முதல் கட்டமாக ஊரைப் பழகிக் கொண்டு, இரண்டாவது கட்டமாக வேலையை விட்டு

59

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மிஸஸ்._இராதா.pdf/65&oldid=1551107" இலிருந்து மீள்விக்கப்பட்டது