பக்கம்:மிஸஸ். இராதா.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆனந்தன் அந்த இடத்தைவிட்டு நகர்வதற்கும், ராதா அங்கு நுழைவதற்கும் சரியாக இருந்தது.

"குட்மார்னிங் கீதா !”

'உனக்கு ஆயுள் கெட்டி! உன்னைப் பற்றிதான் நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம். நீயே வந்து விட்டாய்!”

"ராதா!"

"சார்!"

"நாளைக்கி, கீதாவும், மாப்பிள்ளையும் தலைக்காவேரிக்கு போறாங்க! நீயும் அவங்களோடு போய்ட்டு வந்தா நல்லது? எனக்கும் ஒரு திருப்தி ஏற்படும்!”

"நீங்க எனக்கு பாஸ்! நான் உங்கள் செக்ரெட்ரி! உத்தரவிடுங்கள் போய் வர்றேன்; மற்றபடி எனக்கு மதம், சாமி தரிசனம் இவைகளில் நம்பிக்கையே இல்லை சார்!"

"உனக்கு இல்லை ; எங்களுக்கு இருக்கே! எங்களாலே உனக்கும் புண்ணியம் கிடைக்கட்டுமே”

"கெடைக்கத்தானே அப்பா போகிறது! ராதாவை, அண்ணியினு அழைக்கிற காலம் வராமலா போகப்போகுது!"

கீதாவின் பேச்சிலே ஏதோ உள் அர்த்தம் இருந்துகொண்டே வருகிறது. நான் ஒன்றும் ஏமாந்தவளல்ல; நான் ஏற்கனவே ஒரு முறை ஏமாந்தவள்; அதுவும் கீதாவுக்குத் தெரியும்........."

"தெரிந்துதான் கீதா பேசுகிறாள் என்று வைத்துக் கொள்ளேன். எல்லாம் பேசுகிற நேரம் இது இல்லை; நல்ல காரியங்கிறது ஒரு வீடு கட்ற மாதிரி; அதைக் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் முடிக்கணும்" என்று கூறி முற்றுப்புள்ளி வைத்தார் சடையப்பர்.

நள்ளிரவு! வண்டுகளின் ரீங்காரம் தவிர வேறு எந்தச் சத்தமும் இல்லை. கண்களுக்குத் தென்படாத தென்றல் ஜன்-

62

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மிஸஸ்._இராதா.pdf/68&oldid=1545494" இலிருந்து மீள்விக்கப்பட்டது