பக்கம்:மிஸஸ். இராதா.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

னல் வழியே புகுந்து குழப்பமான நிலையில், ஒருக்களித்துப் படுத்திருந்த ராதாவை எழுப்பி உட்கார வைத்தது. பொழுது புலர்ந்ததும் சடையப்பரின் உத்தரவுப்படி கீதாவுடன் தலைக்காவேரிக்குப் புறப்படுவதற்கு ஆயத்த ஏற்பாடுகளைச் செய்து வைத்திருந்தாள் ராதா. பழங்கள், கட்டுச் சோறு--இவைகள் தயாரிக்கப்பட்டு, ராதாவின் அறையில் தயாராக இருந்தன. ஒரு சிறிய பையில் அவளுக்கு வேண்டிய உடைகளையும் எடுத்து வைத்திருந்தாள்.

முதல் நாள் மாலையில் சடையப்பரும், கீதாவும் பேசிக் கொண்டிருந்ததுதான் ராதாவைக் குழப்பிக் கொண்டிருந்தது. ஏதோ நடக்கப்போகிறது என்று அவள் அஞ்சினாள். அதற்குள்ளாக --"பொல்லாங்கிற்கு இடம் தராமல் எஸ்டேட்டை விட்டுப் போய்விட்டால் நல்லது; ஆனால் எப்படிப் போவது? சடையப்பரிடம் எதைச் சொல்லிவிட்டுப் போவது? ஆனந்தன்தான் என் புருஷன் என்று சொல்லிவிட்டால், இவ்வளவு காலமும் நான் இங்கே இருந்தது, பணியாற்றியது எல்லாமே ஒரு சதித்திட்டம் என்றாகிவிடுமே” என்ற இந்த மனச்சுமைதான், அவள் நெஞ்சை அழுத்திக் கொண்டிருந்தது. அப்போது இரவு மணி இரண்டு அடித்தது.

"ராதா!"

ராதா திடுக்கிட்டுப்போய் படுக்கையை விட்டு எழுந்தாள்.

கைவிளக்குடன் ஆனந்தன் அவளது அறை வாசலில் நின்று கொண்டிருந்தான். -

பாதி ராத்திரி வேளையில் ஆனந்தன் அப்படி தன் அறைக்குள் நுழைவான் என்று ராதா எதிர்பார்க்கவில்லை.

'நீங்களா?'

'நானே தான்!'

'நீங்கள் இப்படி இந்த நேரத்தில் இங்கு வரலாமா? பார்க்-

63

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மிஸஸ்._இராதா.pdf/69&oldid=1545495" இலிருந்து மீள்விக்கப்பட்டது