பக்கம்:மிஸஸ். இராதா.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கிறவர்கள் தப்பாக நினைக்கமாட்டார்களா? தயவு செய்து போய்விடுங்கள். ஆள் அரவம் கேட்டால் நாய் குலைக்கும்; பிறகு வேலையாட்கள் விழித்துக் கொள்வார்கள். உங்களுக்கும் அசிங்கம், எனக்கும் அசிங்கம்! தயவு செய்து போங்கள்!”

'நான் இங்கே வந்திருப்பது நீ நினைப்பது போல் தவறான காரியத்திற்காக அல்ல! உனக்குக் கொஞ்சமாவது விவஸ்தை இருக்கிறதா என்று கேட்டு விட்டுப் போகத்தான் வந்தேன்!'

"ஆனந்த்!”

"நீ திட்டமிட்டே இங்கே நுழைந்து எனது நிம்மதியைக் குலைக்கத்தான் வந்திருக்கிறாய். உனக்குக் கொஞ்சம் கூடவா மானம், ரோஷம் இல்லாமல் போய்விட்டது?"

ஆனந்தன் இப்படிப்பேசியது, ராதாவுக்குத் தன் கூந்தலில் நெருப்புப்பற்றியதுபோல் இருந்தது.

"எனக்கா வெட்கமில்லையா என்று கேட்கிறீர்கள்? இதே கேள்வியை நான் திருப்பிக் கேட்டுவிட நேரமாகி விடாது! யானையை அடக்கி விடக்கூடிய மாவுத்தன், சிலவேளைகளில் தன் கோபத்தை அடக்கிக்கொள்ள முடியாமல் அழிந்து விடுவதைப் போல நீங்கள் நடந்து கொள்கிறீர்கள்!”

"சீ, வெட்கங் கெட்டவளே! உனக்குப் பேச்சு வேறே கேடா?’’

"ஆனந்த்! நிதானமாகப் பேசுங்கள்! உதாசீனப் படுத்திப் பேசுவது உங்களுக்கு மட்டும் ஒதுக்கப்பட்ட ஒன்வே டிராபிக் அல்ல! மரியாதை என்பது ஒருவருக்கொருவர் கொடுத்து வாங்கிக் கொள்ளக்கூடிய ஒரு நாணயமான வியாபாரம் என்று நினைப்பவள் நான். நீங்கள் என்னை எது பேசினாலும் என்னை ஒன்றும் பாதித்து விடாது. ஆனால் நான் ஒரு வார்த்தை திருப்பி பேசிவிட்டால் அது பாவில் விஷம் கலந்தது மாதிரி ஆகிவிடும்!”

"முறைகெட்டுப்போன உன்னேடு நான் தர்க்கம் செய்ய வரவில்லை!"

64

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மிஸஸ்._இராதா.pdf/70&oldid=1545496" இலிருந்து மீள்விக்கப்பட்டது