பக்கம்:மிஸஸ். இராதா.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



தோட்டக்காரனைக் கூப்பிட்டு செடிகளுக்குப் பூச்சி மருந்து அடிச்சியா? என்று கேட்டார்.

சமையல்காரனை வரச்சொல்லி தனக்கு வேண்டிய சாப்பாடுகளைச் சமைக்கச் சொன்னர்,

டிரைவரை அழைத்து மெர்க்காராவிலுள்ள சூப்பர் மார்கெட்டுக்குப் போய் பேரீச்சம்பழம் வாங்கி வரும்படி ஏவினர்.

மாலைவேளையில் டிரான்சிஸ்டரைத்திருகி, கர்னாடக சங்கீதம் கேட்கும் வாடிக்கையைக்கூட அவர் நிறுத்தவில்லை. இவைகளெல்லாம், சடையப்பர் உள்ளத்தில் எந்த உறுத்தலும் இல்லை என்பதை சிப்பந்திகளுக்கு ஜாடை காட்டிக் கொண்டிருந்தன. ஆனல் ராதா? அவள் மழைத்துளியைப்போல் தூய்மையானவள். செம்மறியாட்டைப்போல் கூச்சமுள்ளவள். அவள் மனதுக்குள்ளேயே பொருமிக் கொண்டிருந்தாள்.

சார்!"

"என்ன ராதா!'

"முக்கியமான விஷயமாகத் தங்களைத் தனிமையில் சந்திக்கலாமென்று வந்திருக்கிறேன்!”

"எஸ்டேட் விஷயமா அல்லது ஏலக்காய் மார்க்கெட் விஷயமா?’

"இரண்டுமில்லை! என் விஷயமாக!”

"நீ தான் செக்ரெட்ரி, உன் பொறுப்புத்தான் இந்தத் தோட்டம்! உனக்கென்று என்ன தனியான விஷயம் ராதா?”

“மன்னிக்க வேண்டும் சார்! நான் ஊருக்குப் போய்விடலாமென்று சொல்லிவிட்டுப் போக வந்தேன் சார்!"

"என்ன ராதா, இப்படி திடீரென்று குண்டைத் தூக்கிப் போடுகிறாய்!”

“என்னாலே தான் கீதா கோபித்துக் கொண்டு போய்விட்ட-

74

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மிஸஸ்._இராதா.pdf/80&oldid=1545814" இலிருந்து மீள்விக்கப்பட்டது