பக்கம்:மிஸஸ். இராதா.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராதா அதை, நடுங்கும் கைகளுடன் வாங்கிப் பார்த்தாள்.

"அன்புள்ள ராதா, நான் உயிரோடிருக்கும் வரை நீ தான் இந்த சில்வர் ஸ்டார் எஸ்டேட்டின் செக்ரெட்ரி.

இப்படிக்கு
சடையப்பர்.

—என்று எழுதியிருந்தது. இதைப் படித்ததும் ராதாவின் கண்களில் மேகம் படர்ந்தது. அவள் ஊமையாகிவிட்டாள்.

அதற்குப் பிறகு ராதா, சடையப்பரை அடிக்கடி சந்திக்காமல் இருந்தாள். சடையப்பர் மீது அவளுக்கு மரியாதை கூடியது.

"அரளிப்பூவை யாரும் சூடிக்கொள்ள மாட்டார்கள் என்பதற்காகத்தான் அதை ஆண்டவனே சூடிக் கொண்டுவிடுகிறார் என்பது என்னைப் பொறுத்தவரை நூற்றுக்கு நூறு உண்மை தான். இல்லாவிட்டால் எங்கோ எப்படியோ வாழ்க்கையை முடித்துக்கொள்ள வேண்டியவள் இப்படி ஒரு ஸ்தாதனத்திற்கு வந்திருக்க முடியுமா?" என்று ராதா தனக்குள்ளே எண்ணி அடிக்கடி பூரித்துக் கொண்டாள்.

மதுரைக்குச் சென்ற ஆனந்தும் கீதாவும் எதையோ இழந்தவர்களைப்போல் விரக்தியடைந்திருந்தார்கள். தன்னுடைய முதலாவது திருமணவிஷயம் கீதாவுக்குத் தெரிந்துதான் கீதா இப்படியெல்லாம். அவள் தந்தையிடம் வேகமாக நடந்து கொண்டாளோ என்ற சந்தேகம் ஒவ்வொரு நாளும் பேயுருவில் வந்து அவனை மிரட்டிக் கொண்டிருந்தது.

அதைப் போலவே கீதாவின் உள்ளத்திலேயும்- ராதா எஸ்டேட்டில் நீடித்தால் என்றாவது ஒரு நாள் ஆனந்த் ராதாவின் வலையில் விழுந்து விடுவான் என்ற ஒரு அச்சம் கல்வெட்டைப் போல் பதிந்து போயிருந்தது.

இரண்டுபேருடைய குழப்பங்களும் ஒன்றை ஒன்று தொடா-

76

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மிஸஸ்._இராதா.pdf/82&oldid=1551119" இலிருந்து மீள்விக்கப்பட்டது