பக்கம்:மிஸஸ். இராதா.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 மல் வெய்யிலும் மழையும் போலத் தனித்தனியாக இயங்கிக் கொண்டிருந்தன.

அன்று ஆனந்த் பரபரப்புடன் உள்ளே ஓடிவந்து கீதாவுடன் பேசினான்.

'கீதா!'

'ராதாவுக்கு சீட்டுக் கிழிந்து விடும்!'

'எப்படிச் சொல்கிறீர்கள்! அப்பா ஒரு நாளும் அவளைப் போகச் சொல்ல மாட்டார். அது நடக்கிற காரியமும் இல்லை!' "ஒரு சாலஞ்ச்! நிச்சயமாக அடுத்த வாரமே, ராதா விரட்டப்படுவாள் என்கிறேன் நான்!”

'ஆருடமா ஆனந்த்!'

'இதோ பார் இந்தப் பத்திரிகையைப் படி' என்று அலட்சியமாகத் தூக்கிப் போட்டான் ஆனந்த்.

கீதா பத்திரிகையை எடுத்துப் படித்தாள். அதில், "சில்வர் ஸ்டார் எஸ்டேட்டில் சடையப்பரின் காமலீலகள்” என்ற தலைப்பில் சடையப்பரைப் பற்றியும் ராதாவைப் பற்றியும் தரக்குறைவான வார்த்தைகளால் ஒரு விரிவான செய்தி வெளியாகி இருந்தது!

கீதாவுக்குக் கண்கலங்கியது. உடல் படபடத்தது.

'அப்பாவுக்கும் இப்படி ஒரு ஆசையா? நானே கூடத்தான் ராதாவைச் சித்தியாக்கிக்கொள்ள விரும்பினேன். ஆனல் அவள் ஆனந்தின் முதல் மனைவி என்று தெரிந்த பின்பு தான் அந்த எண்ணத்தைக் கைவிட்டேன். இப்போதுகூட காலம் கடந்துவிட வில்லை. உண்மையைச் சொன்னால் ராதாவை அப்பா நிச்சயமாக டிஸ்மிஸ் செய்துவிடத்தான் செய்வார்! ஆனல் ஆனந்த்,' இப்படி மனதுக்குள்ளே கீதா எண்ணிக் கொண்டிருக்கும்போது எஸ்டேட்டிலிருந்து அவளுக்குக் கெட்டியான கடிதம் வந்திருந்தது.

77

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மிஸஸ்._இராதா.pdf/83&oldid=1545910" இலிருந்து மீள்விக்கப்பட்டது