பக்கம்:மிஸஸ். இராதா.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கீதா அதை உடைத்துப் பார்த்தாள். அவள் தலையில் யாரோ நெருப்பை அள்ளிக் கொட்டுவதுபோல் இருந்தது.

அன்புள்ள கீதா, வீணான வதந்திகளையும், அவதூறான பத்திரிகைச் செய்திகளையும் தினம் தினம் படித்து உன் தந்தை செத்துப் பிழைப்பதைவிட அந்த வதந்திகளையே உண்மையாக்கி விடுவது நல்லதென்று தீர்மானித்து அடுத்த வெள்ளிக்கிழமை காலை தலைக் காவேரியில் நீராடிவிட்டு ராதாவை மணந்து கொள்வது என்று முடிவு செய்துவிட்டேன். உனக்கு மனமிருந்தால் நீ உன் மாப்பிள்ளையுடன் புறப்பட்டு வந்து திருப்பூட்டு விழாவில் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறேன். உறவினர்கள் யாருக்கும் நான் சொல்லவில்லை.

உன் தந்தை,
சடையப்பர்.

"ஆனந்த்!”

"என்ன கீதா!"

"நம் குடி முழுகிப் போய் விட்டது ஆனந்த்!”

"மாமா என்ன எழுதியிருக்கிறார்? ராதாவை டிஸ்மிஸ் செய்திருப்பார்! அவ்வளவுதானே!"

"அதுதான் இல்லை! அப்பா நம்மைத்தான் டிஸ்மிஸ் செய்துவிட்டார். ராதாவை மணந்து கொள்ளத் தீர்மானித்து விட்டாராம்!” .

“ராதா இனிமேல் எனக்கு மதர்-இன்-லா இல்லையா கீதா?"

எஸ்டேட்டில் திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. அதிகாலையில் தலைக்காவேரிக்குப் புறப்பட்டுப் போய் அங்குள்ள ஊற்றுநீர்த் தேக்கத்தில் நீராடிவிட்டு, அகஸ்-

78

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மிஸஸ்._இராதா.pdf/84&oldid=1551120" இலிருந்து மீள்விக்கப்பட்டது