பக்கம்:மிஸஸ். இராதா.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தியர் ஆலயத்தை வலம் வந்து அதற்குப்பின் மாலை மாற்றிக் கொள்வதாகச் சடையப்பர் ஏற்பாடு செய்திருந்தார்.

ஆனல் நடந்தது வேறாகிவிட்டது. இரவோடு இரவாக சடையப்பருக்கு மதுரையில் இருந்து ஒரு தந்தி வந்தது. தன்னுடைய கடிதத்தைப் பார்த்துவிட்டு கீதாவும், ஆனந்தும் வாழ்த்துத் தந்தி கொடுத்திருப்பார்கள் என்றுதான் சடையப்பர் பெருமையோடு தந்தியைப்பிரித்தார். ஆனல் அது மரண ஓலை என்று படித்துப் பார்த்த பின்னர்தான் அ வ ரு க் கு த் தெரிந்தது. -

"என் மனைவி கீதா இறந்து விட்டாள்" என்று ஆனந்த் தந்தி கொடுத்திருந்தான்.

தந்தியைப் படித்ததும் சடையப்பருக்குத் தலை சுற்றுவது போல் இருந்தது.

உடனே அவரும், ராதாவும் மதுரைக்குப் புறப்பட்டார்கள்.

மதுரையில் ஆனந்தின் மாளிகை அலங்கோலமாகக் கிடந்தது!.

"அன்புள்ள அப்பாவுக்கு, தாங்கள் என் பிரேதத்தைப் பார்க்க வந்தால் இந்தக் கடிதத்தைப் படித்து உண்மையைத் தெரிந்துகொள்ளுங்கள். என் கணவர் ஏற்கனவே ஒரு பெண்ணை மணந்திருக்கிறார் அவள் வேறு யாருமல்ல!. ராதாதான். இந்த உண்மை எனக்குத் தெரிந்ததும் நான் எஸ்டேட்டை விட்டு வந்து விட்டேன். அதன் பிறகு தங்களின் திருமண ஏற்பாட்டைப்பார்த்தபின் இனிமேல் என்னால் நிம்மதியாக வாழ முடியாது என்று தீர்மானித்து நானே என் வாழ்க்கையை முடித்துக் கொண்டேன்.”

கீதாவின் இந்தக் கடிதத்தைப் படித்ததும் ராதாவையும், ஆனந்தனையும் ஏறஇறங்கப் பார்த்தார் சடையப்பர். அவர்கள் இருவரும் கால் விரல்களால் தரையைக் கிள்ளிக் கொண்டிருந்தார்கள்.

79

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மிஸஸ்._இராதா.pdf/85&oldid=1545913" இலிருந்து மீள்விக்கப்பட்டது