பக்கம்:மிஸஸ். இராதா.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ஹெட்மிஸ்ட்ரஸ்

நீலா, ராணியல்ல! ஆனால் அவள் ஒரு ராணியைப் போல் தெரிகிறாள். அவளது சிறிய பங்களாவைச் சுற்றிலும் கொய்யா மரங்கள், குடை மல்லிகைச் செடிகள், கூர்க்கா வீரர்களைப் போன்ற செவ்விள நீர் தென்னைகள். அவளுடைய வீட்டுக் காம்பவுண்டு வாசலில் நின்று பார்த்தால் அது ஒரு சோலையாகத் தெரியுமே தவிர உள்ளே மாளிகை இருப்பதே தெரியாது.

நீலாவை அடிக்கடி வெளியிலே பார்க்க முடியாது. காற்று வாங்குவதற்கோ, கடைத்தெருவிற்கோ அவள் போவதில்லை. அவளுக்குக் கூந்தல் மகிழ மல்லிகை வேண்டும்; நெற்றி மகிழக் குங்குமம். இந்த இரண்டையும் வாங்கிவர, அவளுக்குப் பியூன் பொன்னம்பலம் இருக்கிறான், சமையல் வேலைக்கு ஒரு பாட்டி, எடுக்கவும் கொடுக்கவும் ஒரு சிறுமி. இவர்களைத் தவிர அந்த மாளிகையில் வேற்று ஆள் நடமாட்டம் இல்லை. இ வ்வளவு வசதிகளைக் கொண்ட நீலா சில வேளைகளில் பைத்தியம் பிடித்தவளைப்போல சோர்ந்துபோய் சோபாவில் சாய்ந்து விடுகிறாள். அப்படிப்பட்ட நேரங்களி ல் பாட்டி அவளைத் தட்டிஎழுப்பி காப்பி கொடுக்கிறாள். வேலைகளில் மூழ்கி யிருக்கும்போது நீலாவை எந்தக் கவலையும் பீடிப்பதில்லை. பள்ளி விடுமுறைகள்தான் அவளைப் பாடாய்ப்படுத்தின. சனி, ஞாயிறுகளில் நீலா நிம்மதியில்லாமல் இருப்பாள்; இசைப் பெட்டியை திருகி பாட்டுக்கேட்பாள். அதையும் சிறிது நேரம்தான் கேட்பாள். நீலா, பாவம்! வாழ்க்கையை அனுபவித்துத் துப்பிவிட்டு பழுத்துப்போயிருக்கும் வேலைக்காரப் பாட்டி, நீலாவிற்கு ஒரு தேவதை போலவும் வாழ்க்கையின் ருசியைப் பருகுவதற்கு பல ஆண்டு காலம் காத்திருக்க வேண்டிய பருவத்திலிருக்கும் வேலைக்காரச் சிறுமி இரக்கத்திற்குரியவளாகவும் தெரிந்தார்கள்.

உலகில் ரகசியமில்லாத மனிதர்கள் யாருமில்லை. ஆயிரக்கணக்கான ரகசியங்களை மனதுக்குள்ளே ஒளித்து வைத்துக் கொண்டு அசோகன் நாட்டைத் திறம்பட ஆண்டான். மன-

81

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மிஸஸ்._இராதா.pdf/87&oldid=1551123" இலிருந்து மீள்விக்கப்பட்டது