பக்கம்:மிஸஸ். இராதா.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தைச்சுடும் சொந்த ரகசியங்களை மறைத்துக்கொண்டே ராணி மங்கம்மா ராஜ்யபாரம் நடத்தினாள். அந்த வரிசையில்தான் நீலாவைச் சேர்க்க வேண்டும். இருபத்தி நான்கு மணி நேரமும் உடனிருக்கும் பணிப்பெண்கள் கூடத் தெரிந்துகொள்ள முடியாத ஒரு மனச்சுமையை தாங்கிக்கொண்டு நீலா ஒரு பள்ளியின் நிர்வாகத்தை எப்படித்திறம்பட நடத்துகிறாள்!.

புகழ்பெற்ற ராணி கோதை நாச்சியார் மகளிர் உயர்நிலைப் பள்ளியின் ஹெட்மிஸ்ட்ரஸ் அவள். ஆயிரம் பிள்ளைகள் பயிலும் மிகப்பெரிய பள்ளி நீலாவின் கையில் பம்பரம்போல் சுழன்று கொண்டிருந்தது.

நீலா என்பது, அவளுக்கு, அவளது பெற்றேர்கள் வைத்த பெயர். ஆனால் அந்தப்ப்பெயரைச் சொல்லி அழைக்க பள்ளியில் யாருக்குத் தைரியம் இருக்கிறது? 'அம்மா’ என்பதுதான் பள்ளியிலேயே பிரசித்தமான சொல். ஊரிலே ஹெட்மிஸ்ட்ரஸ் என்று சொன்னால் புரியும்!

நீலா பள்ளிக் கூடத்தில் நெருப்பாக இருப்பாள். மற்ற ஆசிரியைகளுக்கு அவளைக்கண்டால் சிம்மசொப்பனம், 'அம்மா வர்றாங்க' என்ற சொற்றொடர் பச்சை குழந்தைகளுக்கு பூச்சாண்டி வர்றான்' என்று சொல்லுவது போல் பள்ளி மாணவிகளின் இரத்தத்தில் ஊறி விட்டது.

நீலா, உடை உடுத்திக் கொள்வதில் கவர்ச்சியை விரும்புகிறவள். அவள் வெள்ளைப்புடவை உடுத்தினால், வெண்புறாவைப் போல் இருப்பாள். புடவைக்கு இணையாக இளம் ரோஜா வண்ணத்தில் ரவிக்கை போட்டுக்கொள்வாள். சிவப்பு ரத்தினத்தை நொறுக்கிப் பொடியாக்கி நெற்றியில் பூட்டியிருப்பதுபோல் குங்குமம் மின்னும். அவள் கருப்புப்புடவை உடுத்தினால் மின்னும் கருங்குயிலாகத் தெரிவாள். பூப்போட்ட புடவைக்கு அவள் பஞ்சவர்ணக்கிளியேதான்!

அழகு என்பது ஒரு புதிர் புரியாதபுதிர். அழகு உருவத்தில் உறைந்து கிடக்குமா? உடையில் புகுந்திருக்குமா? பருவத்தில் பூத்து நிற்குமா? மது அருந்தியவன் எல்லோரையும் ரதி என்-

82

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மிஸஸ்._இராதா.pdf/88&oldid=1545922" இலிருந்து மீள்விக்கப்பட்டது