பக்கம்:மிஸஸ். இராதா.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கிருன்; காம வெறிபிடித்தவன் விளக்கை அணைத்து விட்டால் ராணியும் ஒன்றுதான் தாதியும் ஒன்றுதான் என்கிறான். படித்தவன் ரோஜாவை அழகிய மலர் என்றால், படிக்காதவன், ரோஜாவைவிட மனேரஞ்சிதத்தில்தான் மயக்கும் வாடை இருக்கிறது, ஆகவே அதுவே எனக்கு அழகாகத் தெரிகிறது என்கிறான். இப்படி அழகு ஒரு தத்துவமாகி விட்டதே!

நீலாவிற்கு வயது முப்பது. அவள் எளிய உடைகளைத்தான் உடுத்துகிறாள். குதிரையைப்போல் கருஞ்சிவப்பு நிறமுடையவள்தான். ஆனாலும் ஊரில் நீலா குழப்பாத ஆடவர் உள்ளம் இல்லையே! பள்ளியிலே உள்ளவர்கள் அவளது அதிகாரத்திற்கு அடங்கி விடுகிறார்கள்; ஊரிலே உள்ளவர்கள் அவள் தோற்றத்தில் சுருண்டு வலியவந்து மரியாதை காட்டுகிறார்கள்.

எங்கோ பிறந்த நீலா, ராணி கோதை நாச்சியார் உயர் நிலைப் பள்ளிக்கு ஹெட்மிஸ்ட்ரசாக வந்தாள். சேரிப்பகுதியில் இருந்து சீமான்கள் புரம்வரை அவள் பிரபலமாகிவிட்டாள்.

தோற்றத்தாலும், தூய நடவடிக்கைகளாலும் ஊரையே தன்காலடிக்குக் கொண்டுவந்த நீலா, தனக்குள்ளேயே அடிக்கடி குமுறிக்கொண்டிருக்கிறாளே, ஏன்? வீட்டில் மாடி அறைக்குள் உட்கார்ந்து கொண்டு கண்களைக்கசக்கிக் கொண்டே இருக்கிறாளே எதற்காக?

பல ஆண்டுகளுக்கு முன்பு நீலாவின் மனத்திரையில் நிகழ்ந்த பழைய சம்பவங்கள் சண்டைப்படங்களைப் போல் நடந்து கொண்டிருக்கின்றன. அது இது—

"நீலா, உனக்கு வேண்டிய சாமான்களெல்லாம் வாங்கி வந்திருக்கிறேன். டில்லியில் எதைப் பார்த்தாலும் உனக்கு வாங்கிப்போக வேண்டும் என்றுதான் எனக்கு ஆசை! ஆனால் அவைகளை எப்படிக் கொண்டுவந்து சேர்ப்பது என்றுதான் தெரியவில்லை மிகுந்த அன்புடன் சொன்னன் கனகசுந்தரம்.

நீலா சிரித்தாள். ஆனால் எப்போதும்போல் அவள் உண்மை

83

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மிஸஸ்._இராதா.pdf/89&oldid=1551124" இலிருந்து மீள்விக்கப்பட்டது