பக்கம்:மிஸஸ். இராதா.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

யாகச் சிரிக்கவில்லை. இதற்குமுன் எத்தனேயோ முறை அன்பொழுகச் சிரித்திருக்கிறாள்; கண்டவர் உள்ளத்தில் கெட்ட எண்ணங்களைத் தூண்டும் வகையில் மதுமலர்கள் பூப்பதுபோல் பலமுறை சிரித்திருக்கிறாள். அந்த மலர்ச்சியும், கவர்ச்சியும் போதைத் தன்மையும் இப்போது இல்லை. கனகசுந்தரமும் இதைப் புரிந்து கொண்டான். அவன் மனம் துணுக்குறத்தான் செய்தது. எப்போதுமில்லாத முறையில் நீலா ஏன் இப்படி வஞ்சகமாகச் சிரிக்கிறாள் என்று எண்ணிய கனகசுந்தரம் அடுபடிப்பக்கமாகப் பார்த்தான். நீலாவின் அன்னை ஊரிலிருந்து வந்திருப்பது அவனுக்குப்புரிந்தது. ஏதோ, வீட்டில் ஒத்திகை நடந்திருக்கிறது என்று அவன் தீர்மானித்துக் கொண்டான் துறவியின் கையிலே பணமும், பெண்களின் மனத்திலே ரகசியமும் நிற்காது என்பதை உணர்ந்தவன் போல் கனகன் பெருமூச்சு விட்டுக்கொண்டு கட்டிலுக்கு வந்து உட்கார்ந்தான்.

பொழுது விடிந்தது. கனகத்தின் நண்பர்கள் எல்லோரும் அவனைச் சந்திக்க வந்தார்கள். கனகம் டில்லிக்குப்போய் ஒரு திங்களுக்கு மேலாயிற்று. அன்றுதான் ஊர் திரும்பியிருந்தான். ஆட்டத்தின் சிறப்பு — அதிகாரிகள் சூட்டிய புகழ் மாலை— கவர்னர் ஜெனரல் கொடுத்த விருந்து — அனைத்தையும் விரிவாகச் சொன்னன் சுந்தரம்.

கடைசியாக ஊர்ப் பெரியவர் ஒண்டிப்புலியா பிள்ளை வந்தார். அவர்தான் அந்த ஊருக்ரு நாட்டாண்மை.

"தம்பீ!"

"ஐயா!"

"பிரயாணமெல்லாம் சுகம் தானே!”

“ஒன்றும் குறையில்லை! ரொம்ப நிம்மதி!"

"தங்கச்சி வீட்டிலே தானே?”

"நீலாவைத்தானே கேட்கிறீங்க! அவள் அவங்க தாயார் வீட்டுக்குப் போயிருக்கா! காலேயிலே தான் போயிருக்கா!"

84

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மிஸஸ்._இராதா.pdf/90&oldid=1551125" இலிருந்து மீள்விக்கப்பட்டது