பக்கம்:மிஸஸ். இராதா.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



பெரியவர் லேசாகச் சிரித்தார். அந்தச் சிரிப்பு கோடிக்கணக்கான குழப்பங்களை விளைவித்தது கனகத்திற்கு! நேற்று அவள் விரக்தியோடு சிரித்தாள்; இன்று இவர் விகடமாகச் சிரிக்கிறார்; விபரீதம் காத்திருக்குமோ? —கனகன் கலங்கத்தான் செய்தான்.

பெரியவர் விடவில்லை. கனகத்தின் தோளில் கை போட்டுக் கொண்டே நடந்தார். மணியக்காரரல்லவா—அவர் நடையில் மிடுக்கு இருக்கத்தானே செய்யும். பெரியவர் கனகத்தை கடைத்தெரு தாண்டி குளத்தங்கரைவரை அழைத்துச் சென்றுவிட்டு, பிரியப்போகும் சமயத்தில் எதைச் சொல்ல வேண்டு மென்று துடித்தாரோ அந்தச் செய்தியை கனகத்திடம் சொல்லிவிட்டார். கனகத்தின் குமுறல், அதனால் அவன் முகத்தில் ஏற்பட்ட பிரதிபலிப்பு—எதையும் அந்தப் பெரியவர் ஏறிட்டுப் பார்க்கவில்லை; தகவலைச் சொன்னதும் பச்சைப் பாம்பைப்போல் நெளிந்து வீட்டுக்கு ஓடிவிட்டார். கடந்த இரவு நீலா அலட்சியமாகச் சிரித்ததின் பொருளை கனகன் அப்போதுதான் உணர்ந்தான்.

கனகசுந்தரம் சிறந்த கரக ஆட்டக்காரன். சின்னப்பிள்ளையாக இருந்த காலம் தொட்டே அந்தத் தொழிலை அவன் விரும்பிக் கற்றுத் தேர்ந்து மேலோங்கி வந்தவன். அவனது மாமா சிறந்த கரக விளையாட்டுக் காரர். புதுக்கோட்டை சமஸ்தானத்தில் கொன்னையூர் குருபரனின் கரக ஆட்டம் இல்லாத விழாவே இருக்காது; அவ்வளவு கீர்த்தி இருந்தது அவரது கரக விளையாட்டுக்கு. குருபரனின் ஒரே மகள்தான் நீலா. குருபரன் வாத நோய்க்கு ஆளாகி அல்லல் படுமுன்னரே நீலாவை அவளது பத்தாவது வயதிலேயே கனகசுந்தரத்திற்கு மணமுடித்து வைத்தார். தனது மருமகன் தனது தொழிலையே கற்றுப் புகழ் பெற வேண்டுமென்பது தான் குருபரனின் பிரார்த்தனை. இரண்டாண்டுகளுக்குப் பின் நோய் முற்றி குருபரன் காலமாகிவிட்டார். நீலா படிப்பை நிறுத்தவில்லை. தொடர்ந்து படித்தாள்.

திருவிழாக் காலங்களில் கனகனுக்கு தொடர்ந்து ஆட்டங்கள் வரும். ஊர் திரும்புவதற்கு பத்து நாட்களாகும்! திரும்பும்-

85

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மிஸஸ்._இராதா.pdf/91&oldid=1551127" இலிருந்து மீள்விக்கப்பட்டது