பக்கம்:மிஸஸ். இராதா.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

போதெல்லாம் நீலாவுக்கு புடவைகள், பட்டுத்துணிகள், பவளச் சரங்கள் வாங்கி வரத் தவறமாட்டான் கனகன். தனது மனைவி படித்து உத்தியோகத்திற்கு வரவேண்டுமென்று எண்ணினான் அவன். மனைவிக்கு அவ்வளவு சுதந்திரமும் மதிப்பும் கொடுத்தான். மயிலை எல்லோரும் மதிக்கிறார்கள்; வர்ணிக்கிறார்கள்; அது கேட்டு அந்த மயில் சிலிர்த்துக் கொள்கிறது. மனிதர்கள் என் தோகையைக் கண்டு மயங்கி நிற்கிறார்கள். அவர்கள் என் சொரி பற்றிய கால்களையும் விகாரமான சொட்டை விழுந்த என் நகங்களையும் ஒரு கணம் பார்த்தால் என்னை விரும்பமாட்டார்கள் என்று நினைத்து மயில் நாணிக்கொள்கிறது. அதுபோலவேதான் பெண்களும்! அவர்களது குணம் அவர்களுக்கு மட்டுமே தெரிகிறது. ஆனால் அவர்களது கவர்ச்சி மட்டும் மற்றவர்வர்களுக்கு வலை வீசுகிறது.

நீலா இப்போது கல்லூரி மாணவியாகி விட்டாள். இரட்டைச் சடைபோட்டு கல்லூரிக்கு போகிறாள். பட்டுப் பூச்சியைப் போல் அவள் பலரது கண்களை உறுத்திக் கொண்டிருக்கிறாள்.

கனகன் ஊர் ஊராகச் சுற்றி பொன்னையும் பொருளையும் கொண்டுவந்து குவித்தான், ஜடைவில்லை, ஜரிகைப் புடவை, ஒட்டியானம், வைர மூக்குத்தி—எல்லாமே நீலாவுக்கு வந்தவண்ணமாக இருந்தன.

அன்று!

புதுக்கோட்டை மகர நோன்பு ஆட்டம் முடிந்து கனகன் வீட்டுக்கு வந்தான். மன்னர் கொடுத்த தங்கப் பதக்கத்தை அப்படியே கொண்டுவந்து நீலாவின் கழுத்தில் போட்டான். நீலாவின் நெஞ்சம் மலர்ந்து சுருங்கியது.

"ஏன் நீலா? ஒரு கேள்வி! கல்லூரிக்குப் போனபின்னால் நீ குதூகலமாகவே இல்லையே ஏன்?"

"சொல்லுவதற்கு நடுங்கிக் கொண்டிருந்தேன். நீங்களே கேட்டுவிட்டீர்கள்!" என்றாள் நீலா.

"யாருக்காவது பயப்படுவது நல்லது தான். பயந்து நடுங்கு-

86

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மிஸஸ்._இராதா.pdf/92&oldid=1551128" இலிருந்து மீள்விக்கப்பட்டது