பக்கம்:மிஸஸ். இராதா.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கனகன் உருக்கமாகப் பேசினான். நீலாவின் கண்களில் நீர் பூத்திருப்பதையும் அவன் பார்க்காமலில்லை.

நீலா இப்போது எம். ஏ. பட்டம் பெற்று விட்டாள். மகளிர் பள்ளியில் ஆசிரியர் வேலையும் கிடைத்து விட்டது.

கனகசுந்தரம் திருச்செந்தூர் வேலன் திருவிழா ஆட்டத்திற்கு போய்விட்டு அன்றுதான் கொன்னையூர் திரும்பினான். அன்றே அவனுக்கொரு கடிதம் வந்திருந்தது. உடனே திருவனந்தபுரம் புறப்பட்டு வரும்படி. நீலாவின் மனம் கொதித்தது. அவள் தனக்குள்ளேயே ஒரு தத்துவத்தைச் சொல்லிக் கொண்டாள். கதிரவனைக் காண வெளவாலுக்குக் கண் கூசினால் பகற்பொழுது போனபிறகு பசிக்கு என்ன கிடைக்கும்-இதுதான் அவள் மனதுக்குள்ளேயே முனங்கிக் கொண்ட சொற்கள்.

திருவனந்தபுரத்துத் தந்தச் சிற்பங்களோடு ஒரு வாரம் கழித்து வீடு திரும்பினான் கனகசுந்தரம்.

"நீலா!” என்று அன்புடன் அழைத்தான். நீலா வெளியில் போயிருப்பதாகப் பக்கத்து வீட்டிலிருந்து தகவல் வந்தது. இரவு பத்து மணிவரை வரவில்லை. கனகனுக்கு அவள் மீதிருந்த அன்பு, குறைந்தது சந்தேகத்தின் சாயல் நூலாடைகட்டிக் கொண்டு வடிவெடுத்தது. நீலா வீட்டுக்கு வரும்போது நடுஜாமம் இருவருக்குமிடையே பேச்சு, மூச்சு இல்லை! விவகாரத்தை விடியற்காலை வைத்துக் கொள்ளலாமென இருவருமே தனித்தனியாகத் தீர்மானித்துக் கொண்டார்கள் போலும்! ஆனால் விடியற்காலையில் எதிர்பார்த்தபடி நடக்கவில்லை. க ன க ன் படுக்கையை விட்டு எழுந்திருக்கும் முன்னரே டில்லியிலிருந்து அவனுக்கொரு சேதி வந்திருந்தது. அது டில்லி தமிழ்ச் சங்கத்திலிருந்து கொடுக்கப்பட்ட தந்தி. கவர்னர் ஜெனரல் முன்பாக இந்தியாவிலுள்ள ஒவ்வொரு மொழியினரும் தங்கள் தங்கள் கலையுணர்ச்சியை காட்டுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட கலைவிழாவிற்குக் கனகன் தமிழ்ச் சங்கத்தாரால் அழைக்கப்பட்டிருந்தான். இந்த வாய்ப்பைத் தட்டிக் கழிக்க கனகனுக்கு மனமில்லை. நெக்குரு-

88

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மிஸஸ்._இராதா.pdf/94&oldid=1551129" இலிருந்து மீள்விக்கப்பட்டது