பக்கம்:மிஸஸ். இராதா.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கும் நீலாவின் நெஞ்சைக்கூடச் சமாதானப்படுத்திவிட அவன் தயாராகிவிட்டான்.

'இதுதான் கடைசி ஆட்டம். கவர்னர் ஜெனரல் முன்பாக ஆடப்போகிறேன். தடுக்காதே! மகிழ்ச்சியோடு அனுப்பிவை! மலரைத் தொட்ட விரல் மணக்கும் என்பார்கள். அதுபோல் என் புகழ் உனக்குப் பெருமைதரத் தவறாது நீலா'. கனகன் நீலாவிடம் பூத்தொடுப்பதுபோல் பேசினான். நீலா பேசவில்லை. அவன் நீலாவின் பதிலை எதிர்பார்க்காமலே பிரயாணத்திற்கு ஆயத்தமாகி விட்டான்.

டில்லியில் கனகன் ஆடிய ஆட்டத்தைப் பத்திரிக்கைகள் புகழ்ந்தன. புகைப்படங்களை வெளியிட்டிருந்தன. புதுக்கோட்டையிலிருந்தபடியே நீலா அவற்றைப் படித்தாள். படங்களைப் பார்த்தாள் மகிழவில்லை. மனதுக்குப் பிடிக்காதது கண்ணுக்கு இனிமை தருமா?

கனகன் பெரும் புகழோடு, அரும் பொருள்களுடன் ஊருக்குத் திரும்பி விட்டான். கனகன் டில்லிக்கு போகும்போது அடைத்துக் கொண்டிருந்த சோகச்சுமை திரும்பும் போது அவனிடம் இல்லை. அதற்குப் பதிலாக கனிரசச் செய்திகளைச் சுமந்து கொண்டு வந்திருந்தான். அப்போது தான் ஊர்த்தலைவர் ஒண்டிப் புலியாபிள்ளை திடுக்கிடும் தகவலை கனகனிடம் தேடி வந்து சொன்னார்.

அரசனை அண்டிப் பிழைப்பதும் அழகியை மணந்து கொள்வதும் ஆபத்தானவை. தொடக்கத்தில் அள்ளி அள்ளிக் கொடுத்துவிட்டு திடீரென்று ஒரு நாளைக்கு உன் தலையைத் தருகிறாயா என்பான் அரசன். ஆசைக் காதல் ராஜா என்று ஒசை நயம்படப் பேசி விட்டு பின்னொரு நாளைக்கு, அதெல்லாம் அந்தக் காலம் என்பாள் அழகி. மனைவியின் ஸ்தானத்தை அன்புமிக்க துணைவியின் ஸ்தானத்திலிருந்து உயர்த்தாமலிருந்தால் அவளது வேலை கணவனை மகிழ்விப்பதும் அவனது களைப்பை தீர்ப்பதுமாக இருக்கும். அவளை மயக்கும் மோகினியின் இருப்பிடத்திற்குக் கொண்டு போனால் அவளது வேலை கணவனின் உயிரையும்

89

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மிஸஸ்._இராதா.pdf/95&oldid=1546131" இலிருந்து மீள்விக்கப்பட்டது