பக்கம்:மீனோட்டம்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தை i23 எட்ட பங்களாக்கள் கொண்டதோர் சாலையில் நடந்து கொண்டிருப்பதாகக் கண்டான். அடையாற்றில் ஏதோ ஒரு மூலை. ஜனநடமாட்டமும்இல்லை. எதிரே ஒருபெண் கொஞ்ச தூரத்தில் நடந்து கொண்டிருந்தாள். அவள் பின்னலின் வீச்சும், நடையில் இடையின் ஒடிப்பும் அம்மூக்குப் பொடிக் கலர்ப்புடவையும் எங்கேயோ பார்த்த ஞாபகமாய் இருந் தன. அகஸ்மாத்தாய் அவள் திரும்பிப் பார்த்தாள். அடை யாளம் கண்டு கொண்டதால் சட்டென அவள் முகம் மாறி யது. திரும்பி அவனை நோக்கி எதிர் வந்தாள். "என்ன அம்பி?’’ “யாரு, சாவித்திரியா?” வெய்யிலில் அவன் கண்கள் கூசின. அத்துடன் கொஞ்சம் எரிச்சலும் இருந்தது. “என்ன ரொம்ப இளைத்திருக்கேளே? அடையாளமே தெரியவில்லையே! ஜூரமடிக்கிற முகமாயிருக்கே!” "இருக்கலாம் எல்லாக் கலியாணமுமே-' என்று அசதி யுடன் சிரித்தான். 'நீ என்ன, இன்னமும் படித்துக் கொண்டுதானிருக் கிறாயா?” "ஆமாம்; போன வருஷம் கணக்கில் தவறிப் போச்சு... என்ன உங்கள் ஆம்படையாள் உங்களிடம் வந்து சேர்ந்து விட்டாளா? "இன்னும் இல்லை- என்று மனமில்லாமல் பதிலளித் தான். அவனுக்குச் சிறு கோபமும் வந்தது. ஏது, என் னுடைய விவகாரங்களைப் பற்றி எனக்கிருக்க வேண்டிய சிரத்தைக்குக் குறைச்சலில்லாமல், அதில் சம்பந்தப்படாத வர்களுக்குக்கூட ரொம்ப இருக்கிறாப் போலிருக்கிறதே!” அவன் பேச்சின் குத்தலை அவள் கண்டு கொண்டதாகக் காட்டிக் கொள்ளவில்லை. 'உங்கள் விவகாரங்களில் எனக்குக் கண்டிப்பாய் அக்கிசு உண்டு. தவிர, உங்கள் விவகாரங்களில் நீங்களே ஈடுபடுவதால், உங்களுக்கு உங்கள் விவகாரங்களின் உண்மை மதிப்புத் தெரியாது. ஆனால் நான் எட்ட நின் |றிருப்பதால் எனக்குத் தெரியும். நீங்கள் நினைச்சுண்டிருக்கம் 3.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/124&oldid=870224" இலிருந்து மீள்விக்கப்பட்டது