பக்கம்:மீனோட்டம்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தை 129 உதைச்சுண்டு கொக்கரிக்கிறது. இப்போ வேடிக்கையா யிருக்கும்; அப்புறம் அதுவே தான் கழுத்துக்கும் சுருக்கு. அப்போன்னா தெரியப் போறது? நான் என் அனுபவத்தைக் கொண்டு சொல்லறேன், எனக்கும் என் தாய்க்கும் கூடப் பிடிப்பு விட்டுப் போச்சு, எனக்கு நினைவு வந்து, எனக்குத் தகப்பனில்லாத மர்மம் அரை குறையாய், மூடு சூளையாய், நாலு பேர் வாய் வழி வெளியாகையில். அப்புறம் ஒரு நாளைக்கு எங்கம்மாவைப் பெத்த அம்மா, ஏதோ வார்த்தைத் தடிப்பில் என்னெதிரே என் அம்மாவைப் பார்த்து, ஏண்டி, அன்னிக்குப் பாம்பு கடிச்ச போதே நீ செத்துப் போயிருக்கக் கூடாதா? எனக்குத் தீராத் துக்கமா வந்து சேர்ந்திருக்கையே!-' என்று கேட்டு விட்டாள். . அடுத்த நாள் காலை எங்கம்மாவை எங்கெல்லாமோ தேடி விட்டு, அப்புறம் கொல்லைப் புறக் கிணற்றிலிருந்து அவள் பிணத்தை எடுத்தார்கள்.” சாவித்திரி கொஞ்ச நேரம் அடங்கினாள். வெகு நாழிகை விடாமல் பேசிக் கொண்டிருந்ததாலோ என்னவோ மூச்சுத் திணறிற்று. 'கொ கோ-கொ-கோ-' அந்தச் சப்தம் மரங் கொத்திப் பறவையினுடையதா? பத்தடி தூரத்தில் இரண்டு அணில்கள் வாலைத் தூக்கிக் கொண்டு, ஒன்றையொன்று துரத்திக் கொண்டே கீச்கீச்" எனக் கத்திக் கொண்டு ஓடின. அடுத்த நிமிஷத்தில் எந்தப் பூனை வாயிலோ; ஆயினும் இப்பொழுது எவ்வளவு சந் தோஷமா இருக்கின்றன! ‘எங்கம்மா போய் விட்டதனால் என் வாழ்க்கை விடிந்து விட வில்லை. யாரு, அந்தாத்து சம்பந்தமா பண்ணப் போறேள்? அவ அந்தப் பெண்ணுடைய பெண்ணுன்னா? வயத்திலே இருக்கறத்திலேயே, அம்மாவை ஆத்தோடு கொண்டு வந்து சேர்த்துடுத்து! அதுவும் அப்பனிருக்கை யிலேயே. அத்தோடு போகாமே இப்போ அவளையும் உருட்டிடுத்து. அதிர்ஷ்டம் அவ்வளவு அமர்க்களமாயிருக்கு! போறும் போறாததுக்கு, மூச்சு விட்டத்துக்கெல்லாம், ஆத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/130&oldid=870239" இலிருந்து மீள்விக்கப்பட்டது