பக்கம்:மீனோட்டம்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐயா 143 மல், நகைகளை மட்டும் கழற்றித் தர்மகர்த்தாவிடம் கொடுத்துவிட்டு. பெரிய சாவிக் கொத்தை ஐயாவிடம் விசி யெறிந்து விட்டு (எல்லாம் நீ பூட்டிக்கோ’) வைத்தி குருக்கள் (அவர்தான் ஹெட்') வீட்டுக்குப் போயிவிடுவார், தீபா ராதனை தட்டில் தனியா விழுந்த சில்லறையை(சில்லறையா? நூற்றுக்கணக்கில் தேறும்) எண்ணிப் பங்கீடு பண்ணக்கூட மனமும் உடலும் அசத்தும். ‘எல்லாம் நாளைக்கிப் பார்த்துக்கலாம், ஒடிப் போயிட மாட்டேன், தரித்ரபுத்திகள்! இதனால்தான் கையில் அள்ளற மாதிரி கண்டும் நாம் உருப்படறதில்லே' என்று. மற்ற சிப்பந்திகளை ஆசிர்வாதம் பண்ணிவிட்டு, எல்லாவற்றையும் மடியில் கொட்டிக் கொண்டு போய்விடுவார். நேரம் ஆக ஆக அத்தைப் பாட்டிக்கு வயிற்றில் குதிரைக் குட்டி உதை தாங்க முடியவில்லை. உடன்பிறப்பு இல்லையா? என்றைக்குமில்லாமல் இன்றுமட்டும் எங்களுக்கே எங்கள் கவலை புரியவில்லை. அசதி மறதியாக, அம்பாள் கழுத்தில் ஏதேனும் விட்டுப் போய், அது ஐயா கண்ணில் பட்டு-வேலைக்காரன் மயக்கப் பொடியைத் துவிட்டான்னா?-கையும் பிடியுமா மாட்டிண் டுட்டாரா? அப்படி ஏதேனும் நடந்திருந்தால் இத்தனை நாழி ஊரே கொல்லாகி யிருக்குமே! 'நீங்களதான் கோவில் பக்கம் போய்ப் பாருங்களேன்!” தாத்தா காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை. அவர் பாட்டுக்கு நோட்டுப் புத்தகத்தில் எழுதிக் கொண்டிருந்தார். '..தாராமல் இருப்பாளோ அவள் என்ன சத்தியம் மறந்தவளோ? "ஐயா இதோ வராண்டி? அத்தைப் பாட்டி அறை கூவினாள். குடிகாரன் போல் தள்ளாடித் தள்ளாடி ஒர் உருவம் உள்ளே வந்து, கூடத்தில் தொப்'பென்று விழுந்து உருண்டு கட்டையாகி விட்டது. எங்களுக்கு உடல் வெல வெலத்துவிட்டது. ஐயாவுக்கு உடல் மழுவாய்க் காய்ந்தது. அத்தைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/144&oldid=870267" இலிருந்து மீள்விக்கப்பட்டது