பக்கம்:மீனோட்டம்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#66 மீனோட்டம் டின் வில் வளைவும் தனி முருகு கொண்டன. நான் அவளைக் கவனிப்பதைப் பார்த்து விட்டாள். முகம் செவேலாகி விட்டது. இந்த வயசில் நாணமா? ஆனால் எந்த வயதிலும் சுயமான நாணம் நன்றாய்த் தானிருக்கிறது. இவள் இடுப்பு வளைவில் பிசிர் உதிர்ந்திருப்பதாக என் மனசுக்குத்தான் தோற்றமா? இவள் சந்தோஷமாயிருப் பதைப் பார்த்தாலே எனக்கு சந்தோஷமாயிருக்கிறது. இருக்கட்டும், எங்கள் சந்தோஷத்துக்குத் தானே காசி வந்திருக்கிறான்! x X x அப்போதுதான் கோவிலிலிருந்து திரும்பி வந்தேன். கிணற்றடியில் அவனும் அவளும் அண்டாவுள் குனிந்து என்ன அவ்வளவு சுவாரஸ்யமாகக் கவனிக்கிறார்கள்? நானும் அங்கு போனேன். அண்டாவில் ஜலம் கண்ணாடித் தகடுபோல் அசைவற்று நின்றது. வான பிம்பம், இவ்வளவு துலக்கமாய், அதுவும் இரவில் ஒரு நாளும் தெரிந்ததில்லை. கலக்கம் எங்கள் கண்ணிலா, வானத்துக்கேவா? தனித்தனியாய், சரம்சரமாய், பாளை வெடித்துச் சொரியும் முத்துக்களாய் ஆனால் அத்தனையும் அதனதன் முழு உருவில், ரஸ் குண்டுபோல் தொங்கிக் கொண்டு இன்று எத்தனை நகrத்திரங்கள்! என் எண்ணத்தின் எதிரொலி போல் காசியின் குரல் வந்தது. “இந்த பூமி மீது உலாவும் உயிர்களுக்கு அதிகமாய் நrத்திரங்கள் வாரி இறைந்து கிடக்கின்றன. சூரியனைக் காட்டிலும் மாபெரும் நக்ஷத்திரங்கள். ஆனால் இத்தனை யிலும் பேர் கொண்டது இருபத்தி ஏழுதான், இது வேடிக்கை யாயில்லை? இந்த இருபத்து ஏழின் கதிகளுடன் இந்த உலகத்தின் ஜீவராசிகள் அனைத்தின் விதிகளையும் முடிச்சுப் போட்டு வைத்திருப்பது அதைவிட வேடிக்கையாயில்லை? விபரீதமா யில்லை? நான் நம்பமாட்டேன். பேரில்லாததால் இந்த நrத்திரங்கள், சூரியர்கள், சூரியனைக் காட்டிலும் பெரிய கிரஹகங்கள் இல்லாமல் போய்விட்டனவா? இருபத்தி ஏழின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/167&oldid=870314" இலிருந்து மீள்விக்கப்பட்டது