பக்கம்:மீனோட்டம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ié மீனோட்டம் பொருட்படுத்துவதில்லை. ஏனோ அவருக்கு அலாதிச் சலுகை கவனம் ஊன்றாமையால் வேலையில் நேரும் பிழை களை சகாக்கள் முடித்து திருத்திக் கொடுத்து விடுவார்கள். இப்படியே அவர் காலம் ஒடியிருந்திருக்கிறது. இங்கேயே பிறந்து, வளர்ந்து, வதங்கி கிளர்ந்து கொட்டை உமிழ்ந்தவர். அதுவே அவருடைய கோட்டை. வேளை வரும்போது தன் சோகத்தைத் தாங்கிக் கொண்டே இந்த மண்ணோடு கலந்து விடுவார். அதுவும் அவருடைய கோட்டை. ஊருக்குள் நுழைந்து பஸ் நிலையம் தாண்டி நாற்சத்தி யில் அண்ணாசிலையைக் கடந்து சுற்றுப்புறக் கிராமங் களுக்குப் பாசனத்துக்குப் போகும் அருவியின் கழிவுமேல் ஒடும் பாலத்தில் கால் வைத்ததும், குற்றால மலையிலிருந்து அருவி யின் சொரிவு மலைமீது தவழும் மேக மூட்டத்தைக் கிழித்துக் கொண்டு நேரே கொட்டுவது போன்று அதோ பாறை உச்சி யில் அந்த ஜலக் கொத்தளிப்பு அத்தனை உயரத்திலிருந்து முதன் முதலாய்க் கண்படுகையில் அப்பப்பாl-உடல் சிலிர்க் கிறது. தொண்டையை என்னவோ பண்ணுகிறது. ஸ்தம்பித்து நிற்கிறேன். அந்த தண் சுழிப்பிலிருந்து மூன்று மதத்த சடைகள் பிரிந்து தளையவிழ்ந்து சரிந்து ஆவல் பிடரியில் உந்தி என்னை அருவியண்டை கொண்டு போய் விடுகிறது. எப்படி அங்கு அவ்வளவு விரைவில் சேர்ந் தேன் என்று அப்போது தெரியவில்லை. -பொங்குமாங்கடலுள் விழுந்து தெறித்து, பல்லாயிரம் பிரிகள் பாறையின் விளிம்பிலிருந்து வழிகையில் அம்பா! பர்வதராஜகுமாரி தன் கூந்தலை அருவியில் அலசுகிறாளா அல்லது அவள் கூந்தல்தான் அருவியாய் பாய்கிறதா? என்கீழ் எனக்கு பூமி நடுங்கிற்று. பாலத்தின் கிராதியில் சாய்ந்தேன். நான் நீ என் கையில்

  • ,Fox * - ۱۰ درههای مهم و همه ما بیم : நீ சத்யமா? அல்லது சிந்தனையின் சிற்பமா?

ఫి. . సి. : 3. ལསྐག་ ५ * நீர் வீழ்ச்சியில் நிருபனையாவது உன் சத்யமா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/17&oldid=870319" இலிருந்து மீள்விக்கப்பட்டது