பக்கம்:மீனோட்டம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

}8 மீனோட்டம் அருவி கருணையாய் செர்ரிந்து கொண்டிருக்கிறது. பிரம்மாண்டமான கூந்தல் அருவி புரள குன்றின் உச்சி யில் அவள் அண்ணாந்து படுத்திருக்கிறாள். கூந்தல் அழகையே பார்க்க சக்தி இல்லையே. தேவியின் திருமுகம் காண நமக்குத் தகுதி ஏது? கண்டால் அந்த அழகின் ஊடுரு வலிலேயே பூத்துவிடுவோம். கல்லாய் உறைந்து போவோம். இந்த மலை, இந்த பாறை பூராவே அவ்வாறு அவளை நிமிர்ந்து அவ்வப்போது நோக்கியதால் ஆட்கொள்ளப் பட்ட ஆத்மாக்களின் மொத்தாகாரந்தானோ? இந்த பொங்குமாங்கடல், அருவி கொட்டும் நாளிலிருந்து முதன் முதலாய்ப் பால் தயிராய்த் திரிந்த காலத்திலிருந்து தன் கர்பத்தின் அதல பாதாள கிடங்குகளில் என்னென்ன கதைகள், கற்பனைகள், வரலாறுகள், அம்பலங்கள், வதந்திகள், யதார்த்தங்கள், ஐதீகங்கள், ஸாகலங்கள், கசப்புகள், நாடகங்கள், நேரங்கள், யுகங்கள் உறங்குகின்றன, உழல்கின்றன. இன்னும் தவித்துக் கொண்டிருக் கின்றனவோ? சிந்திக்கச் சிந்திக்க ஏதோ ஒரு பதில் ஊறிக் கொண்டே ஆனால் ஓயாத வியப்பு. வெளியே இருந்து கொண்டு ஆளுக்கு ஒரு புலன், உள்ளே போய்விட்ட பின், விட்டுக் கொடுக்காத ரஹசியங்கள் அவரவர் அறியாமைக்கும் தற்பெருமைக்கும் விளம்பரமாகப் பேசிக் கொண்டிருங்கள். எனக்கு ஆவேசம் தணிந்ததேயன்றி அதன் கவ்வல் என்னை இன்னும் விடவில்லை. இது பல் படவில்லையே ஒழிய தாய்க்கவ்வல் இல்லை. அது விட்டு வைப்பதோ விழுங்குவதோ என் செயலில் இல்லை. அதனின்று தப்பி னாலே உண்டு. அல்லேல் அதன் வழி ஐக்யமாகிக் கொள்வது தான் ஆயினும் இதில் ஒரு லாகிறி புறாவின் மார்பிலிருந்து உதிர்ந்த இறக்கைபோல் நான் பதமாகிவிட்ட மெது, மெத்து, லேசு, இப்படியே சாசுவதத்துக்கும் மிதந்து கொண்டேயிருக்க முடியாதா? - இங்கு இரவும் பகலுமாய் அந்தரத்தில் தம்தம் தடங்களில் நீந்திக் கொண்டு இருக்கும் ஏதேதோ தனித்தனி ஜன்மக் குறைவுகள் , குலைவுகள், ஆசாபாசங்கள், அவஸ்த்தைகள், அறுந்த முடிச்சுகள் இந்த அவசம் பயக்கும் காந்தத்தின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/19&oldid=870331" இலிருந்து மீள்விக்கப்பட்டது