பக்கம்:மீனோட்டம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 மீனோட்டம் அவ்வளவு நொள்ளைப் பேச்சு பேசிய போதிலும், கவி புழுங்கலரிசிக் சோற்றைச் சும்மா விடவில்லை. பாயும் ஜமக் காளமும் போலச் சாதத்தைச் சுருட்டி, கவளமாய் உருட்டி, வாயில் அவன் அப்பிக் கொண்ட ஒரு விறுவிறுப்பைக் கண்டு, 'ஏது, ஆக்கி வைத்தால் நன்றாய் அழிப்பாய் போலிருக் கிறதே!”... என்று கதாசிரியன் அதிசயித்தான். “என்னப்பா, பிரயோசனமில்லை. இதற்குத் தொட்டுக் கொள்ள ஏதாவது இருந்தால், ஏதோ இரண்டு பருக்கை உள்ளே இறங்கும்-வாயை-குமட்டுகிறது. நான் ஏதாவது தேடித்தான் பார்க்கிறேன்.” இருட்டில் ஒவ்வொரு பானையாய்க் கையை விட்டுக் கொண்டு வருகையில், கவியின் கையில் மறுபடியும் ஏதோ சிக்குண்டது.ஆனால், இச்சமயம் தட்டுப்பட்டது ஒரு துணி. அதை வெளிச்சத்தில் கொண்டு வந்தான், 'ஆ புடவை- கவியின் முகத்தைப் பார்க்க வேண்டுமே! காணாததைக் கண்டதுபோல் புடவையைக் கன்னத்தில் ஒத்திக் கொண்டான். இதைப் பற்றியும் அப்புறம் பேசிக் கொள்ளலாம்!-’’ ஆனால், கதாசிரியன் இதைக் கவனிக்கவில்லை. பூஞ்சல் காளான் பூத்த ஒரு கிச்சிலிக்காய்ச் சுருள் அவனுக்கு அகப் பட்டு விட்டது, எப்படி யிருந்தாலென்ன; ஒன்றுமில்லாத தற்கு அது போதாதா? உச்சியேறிய சூரியன் சாய்ந்து, இப்பொழுது மேல்திசை யில் விழவும் ஆரம்பித்து விட்டான். வெப்பம் தணிந்து ஒடும் தண்ணீரில் ஸ்நானம் செய்துவிட்டுக் கரையேறும் போது உண்டாகும் உற்சாகமான குளுமை தேங்கி நின்றது. கதைகாரனும் கவிஞனும் வாசல்புறம் வந்து பின்னால் னக்கட்டிய வண்ணம், இந்தக் குளிர்ந்த வெப்பத்தை அனு பவித்துக் கொண்டு நின்றார்கள். தின்று விட்டு மத்தியான வேளையெல்லாம் நன்றாய்த் தூங்கியபின், இந்த மஞ்சள் வெயிலில் வந்து நின்றதும், ஏதோ மதோன்மத்தம் பிடித்தது. மாலை வேளையே இவ்விடத்தில் நன்றாயிருக்கும்போவி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/61&oldid=870424" இலிருந்து மீள்விக்கப்பட்டது