பக்கம்:மீனோட்டம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலி வீடு థీ ருக்கிறது...” என்றான் கதாசிரியன். ஆம், துருவிக் கொட்டிக் குவிந்த தேங்காய்ச் சிதளில் குங்குமப் பூச் சாற்றை பிழிந்தாற் போல, வானத்தில் அங்கங்கே மேகங்கள் திட்டுத்திட்டாய், சிவப்புப் பூத்து நின்றன. மேல் திசையில் செம்மரத் துலங்கள் பாய்ச்சியது போல் கிரணங்கள் அளாவின. வீட்டுக்குக் கூப்பிடு தூரத்தில் ஒடும் அருவி நீருடன், ரோஜாவின் சிவப்பும் ஒடியது. மாலை யின் மந்தஹாசத்துடன் செடிகள் லஜ்ஜையாய் ஆடின... எங்கும் நிர்ச்சலமயம். "நீ பெரிய கதாசிரியனாயிற்றே; உனக்கு என்ன தோன்றுகிறது; இங்கே நாம் கண்ட புகைப்படத்தையும், புலித்தலையையும் புடவையையும் பற்றி?” ஏதோ ஆவேசம் வந்தவன் போல் கதாசிரியன், பரவச மடைந்த குரலில் சொல்லலுற்றான் : ஒரு நாள் ஒருவன் இங்கே வந்தான், ஒருத்தியுடனும் அவர்களுடைய ஒரே குழந்தையுடனும், எதற்காக இங்கே, எவ்விடமிருந்து வந்தான் என்று நமக்குத் தெரியாது; தெரிய வும் வேண்டியதில்லை. ஆனால், ஒன்று மாத்திரம் நிச்சயம். அவனும் அவளும் எந்தச் சந்தடியினின்று, எந்த நிம்மதியைத் தேடி வந்தார்களோ, அதை இங்கே கண்டுவிட்டார்கள். 'அவர்கள் வந்த புதிதில், இவ்விடம் வெறும் பாழும் குடிசையாயிருந்தது. பிறகு நாளடைவில் குடியிருக்கும் வீடாய், ஒரு மாதிரியாய் ஆகியிருக்கும் என்று நினைக்கிறேன். கட்டடத்தில் கலந்து வரும் பழமையையும் புதுமையையும் பார்த்தால் அப்படித் தோன்றுகிறது. "அவர்களுடைய தொழில் என்னவோ! ஒரு வேளை ஒன்றுமில்லையோ என்னவோ! அவனுக்குப் படிப்பிலும் நம்பிக்கையில்லை என்று தோன்றுகிறது. இங்கே ஒன்றும் புத்தகத்தைக் காணோம். ஆம், படித்துப் பயனென்ன, பார்த்து மகிழ இங்கே எல்லாம் இருக்கும்போது? இந்த நிம்மதியான இடத்தில் யோக நித்திரை செய்வதைவிட, வேறு என்ன வேலை? விடியும் வேளையில் மலைச்சாரல்களி.ை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/62&oldid=870426" இலிருந்து மீள்விக்கப்பட்டது