பக்கம்:மீனோட்டம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலி வீடு 63 கிடந்தது. மூக்கிலிருந்து இரண்டு நூல் இரத்தம் வழிந்து காய்ந்திருந்தது. மூக்குத் தண்டின் மேல் ஒரு சாரி எறும்புகள் மொய்த்துக் கொண்டிருந்தன, அவன் மேல், தோளைக் கவ்விய வண்ணம், நெருங்கி அணைத்த மாதிரி, ஒரு புலி பதுங்கி இறந்திருந்தது. அதன் வயிற்றில் அம்பு பாய்ந்து முதுகின் வழி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது. புலி அவன் பாராத திக்கிலிருந்து பின்புறம் பாய்ந்திருக்க வேண்டும். பாய்ந்ததும், அவன் விழுகையில் இசை கேடாய் அம்பு திரும்பி அதன் வயிற்றில் பாய்ந்திருக்கிறது. இதுதான் ១វិនាយហ៏. 'பிறகு அவன் மனைவி, தன்னந் தனியாய் எப்படி இந்தத் துக்கத்தை சகித்தாளோ? எப்படிப் பிணத்தை அடக்கம் செய்தாளோ! தன்னிடத்துக்கு எப்படித் திரும்பி வந்து சேர்ந்தாளோ! ஆனால், இது மாத்திரம் தெரிகிறது. அவர்கள் வேண்டாமென்று துப்பியெறிந்த எச்சில் சமூகத்தி னிடம் மட்டில் மறுபடியும் போய்ச் சேரவில்லை. அந்தப் புலியின் தலையை உடன் கொண்டு வந்து விட்டாள். உள் விவகாரங்களைக் குடைந்து பஞ்சும் கதம்பை நாரும் அடைத்து அவள் கணவனின் படத்துக்கு எதிர்புரையில் வைத்து விட்டாள். தினம் படத்துக்குப் பூஜை எப்படி நடக்கும் தெரியுமா? அவளுடைய மகன், தகப்பனின் படத்துக்கு முன் வில்லும் அம்பும் ஏந்தி, மாடத்துக்கு எதிர் நின்று குறிபார்த்து புலித்தலையில் இரு கண்களுக்கும் மத்தியில் அம்பு நுழைய எய்ய வேண்டும். பழிக்குப்பழி! நியாயத்துக்குக் கட்டும் கப்பம்! ஆனாலும் இதெல்லாம் முன் தயாரிப்புத்தான்; பெருங்காரியத்துக்குத் தயாராக முன்னால் செய்து கொண்ட ஒர் ஒத்திகைதான்; அப்பனைக் கொன்ற புவியின் வம்சத்தை வேருடன் அழிப்பதற்காக, முன் செய்து கொண்ட ஏற்பாடு தான்...” இவ்விடத்தில் கதாசிரியன், சற்று மூச்சு வாங்கிக் கொண்டு மறுபடியும் சொல்லலுற்றான் : "ஆம், இந்தப் பழிக்குப் பழிவாங்கும் வேலை-வேருடன் களையும் காரியம் என்பதெல்லாம் புதுப்பழக்கமல்ல. இதற்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/64&oldid=870430" இலிருந்து மீள்விக்கப்பட்டது