பக்கம்:மீனோட்டம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி கடிதத்தைப் பிரித்தவுடன் அதிலிருந்து இனிய மெட்டி சத்தத்துடன் ஏதோ ஒண்னு தரையில் விழுந்தது. கையில் எடுத்துப் பார்த்தால் சாவி பளபளத்தது. பித்தளைச் சாவி, அதனின்று பழநி கம்மென்று ஆளைத் தூக்கிற்று. அவரை அறியாமல் வாய் முறுவலித்தது. 'புள்ளையாண்டான் கடுதாசி போட்டிருக்கானா?-- கேட்டுக் கொண்டே உள்ளிருந்து அவள் வந்தாள். அவ ளுக்குக் கட்செவி. லேசான நரை கூந்தலில் அங்கு மிங்குமாய், சுடர் விடுகையில் அவள் முகம் தனியாய்ப் பொலிந்தது. கடிதத்தை அவளிடம் நீட்டினார். கடிதமோ, கதையோ, புராணமோ எதாயிருந்தாலும் அவள்தான் அவருக்குப் படித் துக் காட்டுவாள். தான் உரக்கப் படிக்கையில் தனக்கும் காது கேட்கும். அவருக்கும் படிக்கும் சிரமம் தவிர்க்கலா மல்லவா? - 'அம்மாவுக்கு அநேக கோடி நமஸ்காரம். rேமம். rேமமா? கடைசி நிமிஷத்தில் என் பிளான் தடமாடி விட் டது. இதோ எக்ஸ்கர்ஷனுக்கு வாத்யாருடனும், பையன்களு டனும் புறப்பட்டுக் கொண்டிருக்கிறேன். இது என் படிப் புக்கு அவசியம். மன்னிக்கவும். எளக்கும் ஏமாற்றம்தான் என்று சொல்லணுமா? ஆனால் அம்பாளுக்கு இங்கே இப்போ கோடி அர்ச்சனை நடக்கிறது. நான் வர முடியாவிட்டாலும் அப்பாவும் நீயும் இங்கு வந்து ஏன் தங்கக்கூடாது? அறை ஜன்னவிலிருந்து கோயில் ஸ்தூபி பார்க்க அப்பாவுக்கு ரொம்பப் பிடிக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/78&oldid=870454" இலிருந்து மீள்விக்கப்பட்டது