பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா கட்டுரைகள் 104 'டிரைவரின் கையில் உள்ள ஸ்டியரிங் சக்கரம், காரி, அடியில் நான்கு சக்கரங்கள், எதிரிலும் பக்கத்திலும் பெரிதும் சிறிதுமாய் சுழல்கிற எண்ணற்ற சக்கரங்கள். பஸ்களின் , லாரிகளின், வண்டிகளின், சைக்கிள்களின் சக்கரங்கள் அதிவேகமாய், மிதமாய் எரிபொருள்களின் சக்தியால் சுழல்கிற சக்கரங்கள், வயிற்றில் எரிகிற தீயுடன் உடல் முழுவதும் வியர்வை வழிய மனித முயற்சியால் பாரந்தள்ளப்பட்டு மந்த கதியில் கிறீச்சிடும் சக்கரங்கள்: (சக்கரங்கள் நிற்பதில்லை) இதிலே மனிதனின் வாழ்க்கைச்சக்கரத்தை (Life cycle)யே நுழைத்து விடுகிறார். எரிபொருள் சக்தியால் சுழல்கின்ற சக்கரங்கள் என்று சொல்லிவிட்டு, அடுத்து உடல் முழுவதும் வியர்வை வழிய மனித முயற்சியால் பாரந்தள்ளப்பட்டு மந்தகதியில் கிறீச்சிடும் சக்கரங்கள் என்று ஏழைகளின் வாழ்க்கை வண்டிச்சக்கரத்தை ஒட்டப் பயன்படும் எரிபொருள் வியர்வையே என்று சொல்லாமல் சொல்லும் திறன் இவர் போன்ற படைப்பாளியின் தனித்திறன் அல்லவா? D ஜெயகாந்தன் பிரச்சனைகளை எழுதுகிறார். அவர் கதைகள் பிரச்சினைகளின் சித்திரிப்புகளாகவே உள்ளன. தீர்வுகள் அவரால் சொல்ல முடிவதில்லை என்று முணுமுணுப்போருமுண்டு. தீர்வு சொல்வதென்பது ஒரு படைப்பாளியின் பணியன்று. இருப்பினும், பல கதைகளில் நமக்கு தீர்வுகள் கிடைக்கின்றன. 'பெளருஷம்' கதையில் ரங்கத்திற்கு பாவாடை சாமி மூலம் மறுமணமே தீர்வாகிறது. அதேசமயம் இவ்வாறான தீர்வுகள் கிடைக்கும் கதைகளே இவர் அடிப்படையில் ஒரு மரபியல்வாதி என்று அடையாளம் காட்டுவனவாய் உள்ளன. 'அந்தரங்கம் புனிதமானது கதையில் வருகிற மனைவி கணவன் நடத்தை பற்றித் தெரிந்திருந்தும் மகன் அதில் தலையிடுவதை விரும்பவில்லை. அது அவரது சொந்த விஷயம் என்று பிரித்தெடுத்து, குடும்ப விஷயம் என்று கருதாமல் இன்னொரு நபர் தலையிடத் தேவையில்லை என்று மகனையே தடுத்துவிடுகிறாள். அங்கே மகன் வேணு பாட்டி-தாத்தா ஊருக்குச் செல்வதாக