பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா கட்டுரைகள் : 1.32 நடிப்பிசைப்புலவர் கே.ஆர். இராமசாமி மூச்சுவிடாமல் வேலைத் காரியிலும் சொர்க்க வாசலிலும் அந்த உரையாடல்களைப் பேசின; நீளமாக இருந்தாலும் அண்ணாவின் உரையாடல்கள் எளிமைத் கோலம் பூண்டிருந்தன. சிறுசிறு சொற்றொடர் களாய் அமைந்து சிந்தையைக் கவர்ந்திருந்தன. "தாயே! இதோ, பார் என்னை: ஏழையைப்பார், உழைத்து உழைத்து உருக்குலைந்து போன என்னைப் பார்!உன்னையன்றி வேறு கதியின்றி மோசம் போன என்னைப் பார். நான் என் செய்தேன் உனக்குக் கேடு, ஆயிரம் கண்ணுடையாள் என்று அர்ச்சிக்கிறார்களே. அதில் ஒரு கண்ணால் பார்க்கக் கூடாதா இந்த ஏழைபடும் அவதியை ... கடன் பட்டேன். கல்லுடைத்தேன். மூட்டைசுமந்தேன். வண்டி இழுத்தேன். நான்பாடுபட்ட பணத்தை என் சுகவாழ்விற்கா செலவிட்டேன். இல்லை! சூடம் வாங்கினேன். மாலையிட்டேன். உனக்குப் படையல் படைத்தேன். என்பக்தியில் என்ன தவறு கண்டாய் சொல்!?? இது வேலைக்காரியில் காளியை நோக்கி ஆனந்தன் புலம்புவது. இந்த வசனம் முடிவதில்லை. இன்னும் இரண்டு பக்கம் தொடர் கிறது. 'வறண்ட தலை, இருண்ட விழி, உலர்ந்த உதடு, சுருங்கிய முகம், காய்ந்த வயிறு, சோர்ந்த உடலும், ஒட்டைக்குடிசை,.... ஆட்சியிலே காணக் கிடக்கும் காட்சிகள்.' - சொர்க்கவாசலில் கொடுங்கோலன் வெற்றிவேலனை நோக்கிக் கவிஞன் மதிவாணன் கோபத்தோடு பேசுவதில் ஒரு சிறுபகுதி இது. இதில் உள்ள ஒவ்வொரு வார்த்தையும் ஏழ்மையை அளிமையை யாய்றுவியம் தீட்டிக்காட்டுகிறது. 'கத்தியைத் தீட்டினாயே ஒழிய உள் புத்தியைத்தீட்டவில்லை’ 'எதையும் தாங்கும் இதயம் வேண்டும்'